6
நான் செய்த பூர்வ பாபத்தின் பலனே ? நான் செய்த பிரமாணத்தினின்றும் மாறமாட்டேன்!-உன் கருணை யின்படி செய்யப்பா !
ப. எல்லாம் கருணையின்படி செய்தாச்சு -எல்லாத்தை யும் தொடச்சி விட்டு இக்கதிக்கு கொண்டுவந்து விட்டதே !
ச. பர்வதம் பர்வதம் -தெய்வத்தை இகழாதே, அவர் மனம் வைத்தால் இந்த கடினம் நம்மை இக்கஷ்டத் களினின்றும் மாற்றுவார் ! (வெளியில் மழை ஓய்கி றது) பர்வதம், நம்முடைய வீட்டிலே இன்னும் விற் கக்கூடியது ஏதாவது இருக்கிறதா பாரேன்!-வருகிற வருஷம் எல்லாம் சரியாகப் போய்விடும் என்று எனக்குள் தோன்றுகிறது.
ப. வர்ற வருஷத்துக்கு அப்புறம் பார்த்துக்கொள்ளலாம், இப்போ இந்த வருஷத்து தீபாவளிக்கு என்ன செய்யரது ?
ச. என் உடம்பு சரியா யிருந்தால் நான் எழுந்திருந்து தேடிப்பார்ப்பேன் -பர்வதம், உன்னை வேண்டிக் கொள்ளுகிறேன்; அந்த நாலு பேருக்கும் கதர் துணி மாத்திரமாவது இந்த வருஷம் கொடுத்தாக வேணும், வேறொன்றும் கொடுக்காமற் போனால் போகிறது ; இன்னும் 5-ரூபாய் பொறுமானது ஒன்றுமில்லையா நம்முடைய வீட்டில் ?
ப.உம் உம்!-என் தாலிதானிருக்கிறது !
ச. முருகா! முருகா! முருகா குங்கிலயக் கலய நாயன புத்தி எனக்கு நீ கொடுக்க வில்லையே! நான் என் செய்வேன்! என் செய்வேன்! (அழுகிறார். நடையில் பாயைச் சுருட்டுகிற சப்தம்)
ச. பர்வதம் !-அதென்ன சப்தம்?
ப. எங்கே?-எனக்கொன்றும் கேட்க வில்லையே.
ச. சோமு,-நடைப் பக்கம் ஏதோ சப்தம் கேட்கிறது. எழுந்து பாரப்பா.