பக்கம்:தீபாவளி வரிசை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

9



சொன்னைங்களே-அவர் கதையே படிச்சேன். அப் புறம் இந்த உண்டி ஆப்புடவே- சாமிதான் இத்தெ நமெக்கு மறுபடியுங் கொடுத்தார் இண்ணு நெனைச்சி -நீங்க வருத்தப் படரைங்களே-அந்த வருத்தத்தெ மாத்த வேண்டியது எப்படியாவது என் கடமெ, இண்ணு நினைச்சி-அந்த உண்டியிலே எவ்வளவு இருக்குது இண்ணு ஒடச்சி பாத்தேன்.

ச. உம்.


ப. அதிலே சரியா-அஞ்சி ரூபா முக்காலணா இருந்துது. இது ஒரு சகுனம் இண்ணு நூனேச்சிக்கினு, அந்த அஞ்சி ரூபாயையும் சோமுகிட்ட கொடுத்து, மொத்த பத்து ரூபாய்க்கி, அந்த நாலு கதர் வேட்டியையும் வாங்கிவரச் சொல்லி அனுப்பினேன்.-மீதி முக்கா லணாவுக்கு வேறே ஒரு உண்டியும் வாங்கிவரச் சொன் னேன்.


ச. முருகா! உனக்கென்று வைத்த பணத்தை நாங்கள் இப்படியா செலவழிக்க வேண்டும்?

ப. நீங்க அதுக்காக வருத்தப் படாதைங்க-அவர் துட்டெ நம்ப என்னமான தப்பான வழியிலே செல வழிச்சமா என்ன ? தீபாவளியண்ணு, இந்த ஊரு ஜனங்க சந்தோஷப்படத்தானே செலவழிக்கிறோம்-- அதுக்காக, அவர் ந ம் ப மே லே கொவிச்சிக்க மாட்டாரு-சந்தோஷப் படுவாரு


ச. முருகா! உன் கருணை பர்வதம், நீ சொல்லுவது வாஸ்தவம்தான் ! உனக்கிருக்கும் புத்தி எனக் கில்லையே இவ்விஷயத்தில்.(சோமு ஒரு உண்டியை மாத்திரம் கொண்டுவருகிறான்)

ச. சோமு எங்கே வேஷ்டிகள் ?

சோ. அந்த கடெக்காரன் கிட்டபோய் கேட்டா, கொஞ்ச நாழிக்கு முன்னே யாரோ ஒரு பெரிய மனுஷர் வந்து அந்த நாலு வேஷ்டியையும் வாங்கிகினு பூட்டாரு இண்ணு சொன்னான். அவன்கிட்ட மீதி இருந்த தெல்லா, மில் துணிங்கதான்-உங்களெ கேட்டுட்டு 2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபாவளி_வரிசை.pdf/13&oldid=1415901" இலிருந்து மீள்விக்கப்பட்டது