11
அந்த புள்ளாண்டாங்கிட்ட கொடுத்தூடு-நானு சீக்கிரம் அங்கே வர்ரேன், நீ உடனே போன்னு சொல்லி எங் கையிலே அரை ரூபா எடுத்து வைச்சாரு இது வும் நம்ப அதிஷ்டமுண்ணு சொல்லி கண்ணுகுட் டியே ஓட்டிகினு வந்துட்டெனுங்க - கோவிச்சிகா திங்க !
ச. நான் ஏனப்பா உன் பேரில் கோவிச்சிக்கணும் ?-- யார் அவர்? இப்படி செய்தவர்? இங்கே வருகிறேன் என்றாரா ?-வருகிறாரா இப்பொழுது ? இத்தெ சொல்லிட்டு, இந்த ஊர்லே கருமான் கடெ இருக்குதாமே, எங்கே இண்ணு கேட்டாரு, நானு அதோ சுப்பிரமணி அய்யரு கோவிலு பின் பக்கம் இருக்குதுண்னு காம்பிச்சேன் - அங்கே போயிருக்காரு- ரெண்டு மோடாவண்டியிலே.
தங்கவேலுபிள்ளை வருகிறான்.
த.ஏனையா, சண்முக முதலியார்! இன்னிக்கி எங்க எச மானுக்கு கண்டிப்பா காகிதம் எழுதணும்; அந்த நாலு மாச கொடக்கூலி குடுக்கப்போறைங்களா இல்லையா ? இல்லாபோன, வீட்டே காலிபண்ணனும் மறு மாசம்.
ச. ஐயா, வருகிறமாசம். கார்த்திகை மாசமாச்சுதே எப்படி காலிபண்ணுகிறது ?
த. அதெல்லாம் எனக்குத் தெரியாது-இல்லாபோன வாரண்டு கொண்டு வருவேன்!
ச. முருகா! முருகா!- (வெளியில் மோட்டார் சப்தம்) தங்கவேலுபிள்ளை ஜன்னல் வழியாகப் பார்க்கிறான்)
த. அதோ! என் எசமான் வண்டி ! யார் உன் எசமான் ? டெபிடி கமிஷனர் ஆப் போலீஸ் ! (வெளியே வேக மாய்ப் போகிறான்). சண்முக முதலியார் தவிர, மற்றெல்லோரும் சன்னல் வழியாகப் பார்க்கிறார்கள்.