பக்கம்:தீபாவளி வரிசை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

12

12 சோ. நாயினா நம்ப ஊட்டுக்கு எதிரிலேதான் வந்துருக்குது ரெண்டு பெரிய மோடார் வண்டிங்க !

ப. தட்டு தட்டாக சாமான்களெ எறக்கராங்க !

பா. பக்கத்து வண்டியிலே இருந்து மூட்டைங்களெ எறக்காங்க !

மு. நாயினா! நாயினா! கூடைங்கள்ளே டபாசு பொட்லங்க வருது டபாசு பொட்லங்க வருது சுருசுருந்து வத் திங்க மத்தாப்புங்க! பூ வத்திங்க! புருசுங்கொ -

வி. யாரோ ஒருத்தர், வெள்ளித் தட்லே என்னமோ எடுத்துகினு வர்ராரு !

ப.அண்ணாத்தே! அண்ணாத்தெ !(கூவிக் கொண்டு வெளியே போகிறாள்).

ச. இதெல்லாம் என்ன -நான் என்ன கனவு காண்கிறேனா? முருகா! இதெல்லாம் என்ன ?-உன் திருவிளை யாட்டோ ? (திருமெஞ்ஞான முதலியார், ஒரு வெள்ளித் தட்டில் கதர் சரிகை வேஷ்டிகள் இரண்டு, சரிகை புடவையொன்று, காசுமாலை யொன்று, வெள்ளி சந்தண கிண்ணம், வெள்ளி பன்னீர் சொம்பு, பாக்கு, வெற்றிலை, பழம், மஞ்சள், குங்கு மம் எல்லாம் வைத்துக்கொண்டு, உள்ளே வருகிறார்)

பர்வதம் பின்னால் வருகிறாள்

தி. அத்தான் அத்தான் ! என்னை மன்னிக்கவேண்டும்! (தாம்பாளத்தை கட்டி லருகிலிருக்கும் ஒரு பென்சின் மீது வைத்துவிட்டு, நமஸ்கரிக்கிறார்)

ச. திருமெஞ்ஞானம் !

தி. ஆம், நான்தான் அத்தான். (சன்னலண்டையிருந்து) நாயினா நாயினா சக்கர பாணங்கூட வருது வருது .

ச. அப்பா! நீ வந்தது சந்தோஷம் இதல்லாம் என்ன ? எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. தீபாவளி வரிசை -பதினெட்டு வருஷத்துக்கு முன் பாக வைக்காமற் போனதை இப்பொழுது செய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபாவளி_வரிசை.pdf/16&oldid=1415923" இலிருந்து மீள்விக்கப்பட்டது