பக்கம்:தீபாவளி வரிசை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

13



கிறேன் ! உங்கள் இச்சைப்படியே, உங்களுக்கு கதர் வேஷ்டிகள் கொண்டுவந்திருக்கிறேன் ! 

ச. முருகா! முருகா!

தி. அத்தான், என்னை மன்னித்து எப்படியாவது இதை நீங்கள் பெற்றுக்கொள்ளவேண்டும்.

ச. அப்படியே அப்பா-சந்தோஷமாக ஏற்றுக்கொள்ளு கிறேன்-உன்மீது ஒன்றும் குற்றமில்லை. நான் ஏதோ பூர்வ ஜன்மத்தில் செய்த பாபத்திற்காக முருகன் என்னை தண்டித்தார்

தி. இதுவரையில். உங்கள் தப்பு என்று நான் ஒப்புக்கொள்ளமாட்டேன். -எனக்கு இப்பொழுதுதான் புத்திவந்தது -தங்க வேலு :-(கூப்பிடுகிறார்)

(தங்கவேலு ஏன் என்று சொல்லிக்கொண்டு வருகிறான்) மற்ற கட்டுகளை யெல்லாம் கொண்டுவந்து வை,

(தங்கபிள்ளை அப்படி செய்கிறான்)

ச. நீயா-டெபுடு கமிஷனர் ஆப் போலீஸ்-;

தி. ஆமாம், அது கெடக்கட்டும்-உங்கள் குழந்தைகளை இன்னின்னரென்று எனக்குத் தெரிவிக்கவில்லையே?

ப. நான் சொல்லுகிறேன்-இவன் தான் பெரிய பிள்ளை சோமு.-இவன் இரண்டாவது பிள்ளை-பாலசுந்தரம். நானு மூணாவது புள்ளெ-முருகேசம். இவள்தான் என் பெண் எல்லோரையும்விட மூத்தவள் -விஜயலட்சுமி.

மு. இவரு யாரம்மா ?

ப. இவர் தானடா, உங்க மாமா-எங்க அண்ணாத்தெ. அப்பேன், இதென்ன இது ?- இத்தனை தட்டுகள் ? ஆமாம் அத்தான், பதினெட்டு வருஷம் வைக்காம சகளை யெல்லாம் சேர்த்து வைத்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபாவளி_வரிசை.pdf/17&oldid=1415924" இலிருந்து மீள்விக்கப்பட்டது