பக்கம்:தீபாவளி வரிசை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

17


மூன்றாம் காட்சி

இடம்-அதே யிடம்,

காலம் -மறுநாட் காலே-

சண்முக முதலியார் முன்புபோல கட்டிலின் மீது படுத்துக்கொண் டிருக்கிறார் கதர் வஸ்திரம் அணிந்துக்கொண் டிருக்கிறார்,

ச. முருகா! உன்பேருருளை நான் என்னென்று போற்று வேன் இவ்வளவு சந்தோஷத்துடன் நான் தீபாவளி ஸ்நானம் செய்வேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. பர்வதம் புதிய கதர் புடவையெல்லாம் அணிந்து கொண்டு காசு மாலையையும் அணிந்தவளாய் வருகிறாள். அத்தான்-நான் சேவித்துக்கொள்ரேன். (விழுந்து நமஸ்கரிக்கிறாள்)

ச. முருகர் உனக்கு எப்பொழுதும் இன்னருள் பாலிப்பாராக ?-என் அருகில் வா - இதேது புடவை கதர் புடவையா இது ?

ப.ஆமாம், நீங்கள் வேண்டுமென்றால் தொட்டுப் பாருங் கள் (தன் முந்தானையை காட்டுகிறாள்) நேத்து வரிசை கொண்டாந்தாரே அண்ணாத்தெ அது.

ச. (அதைத் தொட்டுப் பார்த்து) கதர் தான் ? பட்டைப் போலிருக்கிறதே கதரில் இவ்வளவு காசுக்காக நெய் வார்கள் என்று நினைக்கவில்லை.-எவ்வளவு சரிகை! -நிரம்ப விலையாயிருக்கும் போலிருக்கிறதே!

ப. ஆமாம் - அண்ணாத்தையெ கேட்டேன் - வெலெ சொல்லமாட்டேன் இண்ணாரு-முன்தாணி முனை யிலெ வேலெ போட்டிருந்தது-150 ரூபாயின்னு! இதெல்லாம் எவ்வளவு செலவாயிருக்கும் அவனுக்கு!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபாவளி_வரிசை.pdf/21&oldid=1415989" இலிருந்து மீள்விக்கப்பட்டது