பக்கம்:தீபாவளி வரிசை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

20

20 தி. நான் புதுசாக இப்பொழுதுதான் கதர் உடுத்திக் கொண்டிருக்கிறேன் ! இதற்காகவாவது உங்களை சேவித்துக்கொள்ள வேண்டாமா ? உங்களால் தானே எனக்கு இந்த நல்ல புத்தி வந்தது. எப்பொழுதும் இந்த புத்தி இருக்கவேண்டுமென்று ஆசீர்வாதம் பண்ணுங்கள்.


ச. அப்ப என்னால் ஒன்றுமில்லை. உனக்கு இந்த புத்தியைக் கொடுத்த முருகவேள் உனக்கு தீர்க்காயு சையும் சகல ஐஸ்வர்யங்களையும் கொடுப்பாராக

சோ. அப்பா, நாங்களும் நமஸ்கரிக்கிறோம். (மூவரும் நமஸ் கரிக்கிறார்கள்; அவர்கள் தலையில் கையை வைத்து ஆசீர்வதிக்கிறார்) விஜயலட்சுமி எங்கே? அவள் ஸ்நானம் பண்ணியாச்சுதா ?

ப. ஆச்சி.அடுப்பண்டை - அவுங்க மாமாவுக்காக தேன்குழல் சுட்டுக்கொண்டிருக்கிறாள் அவள்

தி. நான் சொல்லிவிடுகிறேன். - அத்தான், என்மீது கோபித்து கொள்ளக்கூடாது. நான் உங்கள் அனு மதியில்லாமல் ஒன்று செய்துவிட்டேன். அவளுக்கும் ஒரு நல்ல சரிகை போட்ட கதர் புடைவை பார்த்தேன் அகப்படவில்லை சரியானதாக - அதன்பேரில் பட்டு சரிகைப் புடவை ஒன்று வாங்கிக்கொண்டு வந்தேன். அதை உங்கள் உத்தரவில்லாமல் கட்டிக்கொள்ள மாட்டேன் என்றாள்-பெரிதல்ல அம்மா நான் உங்கள் அப்பாவிடம் சொல்கிறேன்-அதுவும் எல்லாம் நம்மு டைய நாட்டில் உண்டான பொருள்களாலாயது அவர் கோபித்துக்கொள்ளமாட்டார், என்று சொல்லி, உடுத்திக்கொள்ளச் சொன்னேன்.என்னை மன்னிக்க வேண்டும்,

ச. அதில் தவறொன்று மில்லை - அப்பா, சி ன் ன பிள்ளைகள்-அவர்கள் இஷ்டத்தையும் நாம் கவனிக்க வேண்டுமல்லவா? அதுவும் பெண்பிள்ளைகள்-நாம் ஒரே பிடிவாதமா யிருக்கலாமா? எனக்கும் கொஞ்சம் புத்தி வந்தது-(முருகேசன் வெளியே போகிறான்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபாவளி_வரிசை.pdf/24&oldid=1416060" இலிருந்து மீள்விக்கப்பட்டது