பக்கம்:தீபாவளி வரிசை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

25

 கலியாணம் செய்து வைக்க வேண்டுமென்று எண்ணி, இதைப்பற்றி அவனிடம் பிரஸ்தாபம்பண்ண, அவன் இப்பொழுது தனக்கு கலியாணமே வேண்டாமென்று மறுத்து வந்தான். கொஞ்ச நாளைக்குமுன் ஒருநாள் என்னுடைய குடும்ப ஆல்பம் (Family Album) எடுத் துப் பார்த்துக் கொண்டிருந்தவன். அதில் உன் பட மிருப்பதைக் கண்டு, இது யார் படம் என்று என்னைக் கேட்டான். அத ற்கு நான் உனது அத்தை-என் தங்கையுடையது சுமார் 20 வருடங்களுக்கு முன் பிடித்த படம் என்று சொல்லி - ஏன் கேட்கிறாய் என்று கேட்டேன். அதற்கு அவன்-நிரம்ப அழகா யிருக்கிறார்கள், நான் அவர்களைப் பார்த்ததேயில்லை -என்று சொன்னான்.

ப. ஆமாம், அவன் கைக் குழந்தையா யிருக்கும்போது தான் நான் கடைசியில் பார்த்தது.-இன்னும் என்ன சொன்னான் ?

தி. அச்சமயம் ஒன்றும் சொல்லவில்லை. பிறகு கொஞ்ச நாள் பொறுத்து அவனது விவாகத்தைப் பற்றி பிரஸ் தாபம் பண்ணினபோது-தன் அத்தையைப்போல் அவ்வளவு அழகான பெண் கிடைத்தால்தான்-தான் விவாகம் செய்துகொள்ளப் போவதாகத் தெரிவித் தான்.

ப. அதுக்கு நீங்க என்ன சொன்னைங்க?

தி. அப்போது நான் சொன்னதைச் சொல்கிறேன். . உனக்கு அவ்வளவு அழகான பெண் கிடைக்கப் போகிற தில்லை, உன் அத்தை சிறு வயதில் முதலியார் குடும் பங்களில் இவ்வளவு அழகான பெண்ணே கிடை யாது என்று பெயர் எடுத்தார்கள் அப்பா-என்றேன். அதற்கவன் - அப்படிப்பட்ட பெண் கிடைத்தால் கலியாணம் செய்துகொள்கிறேன், இல்லாவிட்டாள் பிரம்மச்சாரியராகவே இருக்கப்போகிறேன்-என்றான். இவர்கள் இரண்டு பெயருக்கும் ஒரே மாதிரியான பதில் சொல்லும்படி யார் கற்பித்தது? .

ச. முருகன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபாவளி_வரிசை.pdf/29&oldid=1416065" இலிருந்து மீள்விக்கப்பட்டது