பக்கம்:தீபாவளி வரிசை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

26

 தி. அப்படித்தான் நானும் நினைக்கவேண்டியதா யிருக் கிறது அத்தான். ஆகவே அவன் சம்மதியைப் ப ற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை நான் நடையில் அன்றிரவு படுக்க வந்தபோது எனக்குப் பாயைக் கொடுக்க வந்தாளே விஜயலட்சுமி - சோமுவிடம் அதைக் கொடுத்துவிட்டு சரேலென்று போனபோது அவள் நீ தானோ, என்று பிரமித்தேன் ஒரு கடினம் ! -பிறகு நீங்கள் பேசிய பேச்சினால்-இன்னாரென்று கண்டு கொண்டேன்-உங்கள் குரல் வித்யாசத்தினால். விஜயலட்சுமி படம் ஒன்றிருந்தால் கொடுங்கள். நான் உடனே எடுத்துக் கொண்டுபோய்க் காட்டி அவன் வேண்டியபடியே கிடைத்தது தெய்வாதீனம் என்று சொல்லி, அவனைத் திருப்தி செய்து, தை மாசம் ஒரு நாளைக் குறித்துக்கொண்டு எழுதுகிறேன்.

ச. அவள் படம்-இல்லேயே அப்பா.


ப. இருக்கிறது. இருக்கிறது. போன வருஷம் கலெக்டர் பெண் சாதி யம்மாள் நம்முடைய ஊருக்கு, கிராம பரிபாலன சபை ஏற்படுத்த வக்தபோது எல்லாப் பெண்களையும் ஒன்றாய் உட்காரவைத்து எடுத்தார் களே, அந்தப் படம் இருக்கிறது. (வெளியே போகிறாள்; வீதியில் மோடார் ஹான் சப்தம் .முருகேசன் வெளியே ஓடுகிறான்)

தி. அத்தான், சரியான வேளைக்கு என் காரும் வந்தது.நான் இன்று சாப்பாடானவுடன் புறப்பட்டுப் போகி றேன். . (பர்வதம் ஒரு குரூப் (Group) படத்தை எடுத்துக் கொண்டு வருகிறாள்)

தி. (அதை வாங்கிப் பார்த்து)பர்வதம் ! உன் பெண் உன்னை அப்படியே அச்சில் வார்த்தாற்போலிருக் கிறது.!

ப. சும்மா சொல்லாதீர்கள் - அவள் என்ன அழகாயிருக்கிறாள் ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபாவளி_வரிசை.pdf/30&oldid=1416066" இலிருந்து மீள்விக்கப்பட்டது