பக்கம்:தீபாவளி வரிசை.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

'தீபாவளி வரிசை

முதல் அங்கம்

முதல் காட்சி

இடம் :-சுண்ணாம்பு கூட அடிக்கப் படாத, கொஞ்சம் இடிந்த வீட்டில் ஒர் அறை. அறையின் தெற்கு நோக்கிய தெருப்பக்கத் தாழ்வாரத்தின்புறம் ஓர் ஜன்னலிருக்கிறது. கீழ்ப்பக்கத்து நடையை நோக் கின. ஜன்னல் கொஞ்சம் திறந்திருக்கிறது. வடக்கு புறம், வாயில் பக்கமாக ஓர் கதவு திறந்திருக்கிறது. அறைக்குள் மேற்குபுறம் ஒரு பழைய கட்டிலின் மீது சண்முக முதலியார் படுத்திருக்கிறார், கீழே கோரைப் பாய்களின் மீது, சோமசுந்தரம், பாலசுந்தரம், முரு கேசன், படுத்துக்கொண் டிருக்கின்றனர். கட்டிலின் பக்கத்தில் நின்றுகொண்டு பர்வதம்மாள் சண்முகமுதலியாருக்குக் கஞ்சி கொடுத்துக் கொண்டிருக் கிறாள். விஜயலட்சுமி தன் தாயார் பக்கத்திலிருந்து கொண்டு, அவளுக்கு ஒத்தாசை செய்துகொண்டிருக் கிறாள். வெளியில் பலமாக மழை பெய்கிறது.

காலம்-இரவு சுமார் 9 மணி.


ச.மழை பலக்கிறார் போலிருக்கிறது- தீபாவளி மூட்டமல்லவா !

ப.நல்ல தீபாவளி மூட்டந்தான் ! இப்பொழுது பெய் கிறது கொஞ்சம் ஆடி மாதம் பெய்திருக்கிலாகாதா ?

ச.இப்பொழுதாவது கொஞ்சம் பெய்கிறதே, அதற்காக சந்தோஷப்படு-சோமு, தெருப்பக்கம் ஜன்னலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபாவளி_வரிசை.pdf/5&oldid=1415890" இலிருந்து மீள்விக்கப்பட்டது