பக்கம்:தீபாவளி வரிசை.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

4

 குட்டியை விற்கவேண்டிய தாயிற்று. (பர்வதம் சோமு, விஜயலட்சுமி வருகிறார்கள்) முருகேசம், துக்கப்படாதே ஸ்வாமியைக் குறித்து பிரார்த்தனை பண்ணு, அவர் உனக்கு வேறு கன்றுக்குட்டி ஏதாவது கொடுப்பார்


மு. உம்-உம் - எனக்கு என் கண்னு கண்ணுகுட்டி தான் வோணும். (அழுகிறான்)

ச. அப்பனே - அப்பா - முருகையா - கண்ணு நான் சொல்வதைக் கேள்-அதன் பேரில் நீ அவ்வளவு ஆசையா யிருக்கிறாய் என்று தெரியாமற் போச்சு அதை விற்றாயதே கடைசி வீட்டிலிருக்கும் இடையனுக்கு- அவன் திருப்பிக் கொடுப்பானா ? நான் சொல்லுகிறபடி கேள்-ஸ்வாமியை வேறு என்னமாவது கொடுக்கும்படி கேள். .

மு. வேறே என்ன கேட்டாலும் கொடுப்பாரா?-என்ன கேட்டாலும் ?


ச. அப்பா, ஜகதீசன் மனம் வைத்தால் எதையும் கொடுக்கும் சக்தி உண்டு- . ஆனா-நானு வேறே கேட்டு பாக்கரேன்- (மொன மொன என்கிறான்) என்னடா கேக்கரெ சாமியே?

மு. சொல்லட்டுமா ?


ச. சொல்லு பாக்கலாம்.

மு.சாமி-நாளை ராத்திரி நான் சுட, டபாசு, புருசு, மத்தாப்பு, சுருசுருவத்தி, பூவத்தி-எல்லாம் ஓணும் கொடுங்க இண்ணு கேட்டேன்-ஏ ஏ மறந்து ட்டேனே-சக்கரபாணம்கூட வோணும் (சண்முக முதலியார் தவிர மற்றவர்களெல்லாம் சிரிக்கிறார்கள்). ஏன் நாயின. இவங்கல்லா சிரிக்கராங்க ? -சாமி கிட்ட இதெல்லாம் வாங்கி தர துட்டு இருக்காதோ ? (மறுபடியும் அவர்கள் எல்லாம் சிரிக்கிறார்கள்)

ச. பர்வதம்! நீயும் என்ன சிரிக்கிறாய்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபாவளி_வரிசை.pdf/8&oldid=1415932" இலிருந்து மீள்விக்கப்பட்டது