5
ப. இல்லேண்ணா அவன் பேராசையெ பாருங்க - நானு நாளெ ராத்திரிக்கி தோசெ சுட கல்லில்லேயே இண்ணு - மூக்காலெ அழுதுகினு இருக்கிரேன், இவனுக்கு டபாசு ஓணுமாம், புருசு ஓணுமாம் சக்கர பாணம் ஓணுமாம் -
ச. ஏன் ?-நம்முடைய வீட்டில் தோசைக்கல் இல்லையா?
ப. அத்தெ, நம்ப புண்யவதி விஜயலட்சுமி ஒடைச்சி விட்டா மத்தியானம்.
வி. ஏம்மா! நீங்கதான் பாத்துகினு இருந்தைங்களே ! அது ரொம்ப தேஞ்சிபோயிருந்துது இண்ணைங்களை அத்தெ கரிபோக நான் தொலக்கும்போது-அது ரெண்டா போச்சுது! நான் என்னம்மா செய்யறது ?
ப. உன் பேர்லே தப்பு சொல்லலே கண்ணு - ஒண் ணுக்கு மேலே ஒண்ணு, துர் அதிர்ஷ்டம் எல்லாம் ஒண்ணாவருதே இண்ணு கவலைப் பட்டேன்.--நம்ப ஊர் கருமான்கிட்ட போயி இரும்பிலே தோசெக் கல் லிருக்குதா இண்ணு கேட்டா, அவன் ஒண்ணு தானிருக்குது, அது ஒண்ணரை ரூபாய் வெலே இண் ணான், முக்கால் ரூபாய் வரைக்கும் கேட்டுப் பாத் தேன், கொடுக்க மாட்டேன் இண்ணான் ! நான் தீபா வளிக்கு பண்ணக்காரருக்கு தோசெ எங்கே கொடுக் கிறது ! நம்பொ என்ன சாப்பிடரது ?
ச. என் அப்பா ! - முருகையா! - சோமு, நான் கதர் தோவத்தி வாங்கிவரச் சொன்னேனே, வாங்கி வந் தாயா அப்பா ?
சோ. இல்லே நாயினா-அந்த துணிக் கடெக்காரன் அஞ்சி ரூபாய்க்கி, ரெண்டு கதர் தொவத்திதான் கொடுக்க முடியும் இண்ரா-வேணுமிண்ணா நாலு மில் தொவத்தி கொடுக்கரேன் இண்ரான் !
ச. முருகையா 18-வருஷத்துக்கு முன்னே, நான் மில் தொவத்தி வாங்குகிறதுமில்லை வாங்கிக் கொடுக்கிறது மில்லை என்று நான் பிரமாணம் செய்ததை இப்பொழுது மாற்றச் சொல்கிறாயா அப்பா ?- அப் பனே என்னைப் பரிசோதிக்கிறாயா? அல்லது இது