பக்கம்:தீயின் சிறு திவலை.pdf/52

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
51

5i ஜெ. ஆஹா! அப்படியா சமாசாரம் : இளவரசர் அங் கிருந்தாரா ? (இ. யூ.) ஆம் இருந்தார். ஜெ. அவர் ஏதாவது சொன்னரா ? செய்தாரா? (இ. ஆ.) அவர் சும்மா உட்கார்ந்துகொண்டு இதையெல் லாம் கேட்டுக்கொண்டும் பார்த்துக்கொண்டும் இருந் தார். چاپ ஜெ. ஆஹா அப்படியா சமாசாரம் இதுவரையில் இந்த ராஜ்ய வம்சத்தார் நமக்கிழைத்த தீமைகளேயெல்லாம் பொறுத்திருந்தேன்! இனி பொறுக்கமாட்டேன் ! என் தம்பி, தகப்பன், அண்ணன், பந்துக்கள் எல் லாம் இறந்ததற்காக, இதுவரையில் நான் பழிவாங்கா திருந்ததே தவருகும் !-இளவரசருக்காகப் பொறுத் திருந்தேன்! இனி நான் பொறுக்கமாட்டேன்! வாருங்கள் ! நாம் எல்லோரும் அரசரது தர்பாருக்குப் போவோம்!-அவரது எதிரில், நானே இந்த மணியை அடிக்கிறேன் -இந்த அரசரது ராஜ்யம் பாழாய்ப் போக ! (ஜனங்கள்) அரசரது ராஜ்யம் பாழாய்ப்போக ! ஜெ. இந்த மதப்பிரஷ்டனுக்கு மரண தண்டனே நாம் விதிப்போமாக (ஜனங்கள்) மரண தண்டனே நாம் விதிப்போமாக ! ஜெ. சகோதர்,சகோதரிகளே காளிகா தேவிக்கு ஜெய் ! (ஜனங்கள்) காளிகா தேவிக்கு ஜெய்! (ஜெயா அந்தமணியைத் தான் வாங்கிக்கொண்டு, அடித்துக்கொண்டு புறப்பட, ஜனங்களெல்லாம் ஆரவாரம் செய்துகொண்டு அவளைப் பின்தொடர் கின்றனர்.) T ೬ மு. டி கி ற து .