பக்கம்:தீயின் சிறு திவலை.pdf/55

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
54

54 பேர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்! அவர் க ளெல்லாம் வெளியே காத்துக்கொண்டிருக்கின்றனர்! -உங்கள் படைவீரர்களுக்கு நீர் செய்வதுபோல்நான் அவர்களுக்கு ஒரு சிறுசைகை செய்யவேண்டி யதுதான் பாக்கி அந்த சைகை செய்யாதபடி கடுக்கிறேன் ! அதைக் கொடுக்கும் கரத்தைத் துண்டிக்கிறேன் ! அதைக் கொடுக்க விரும்பும் உன் கண்களைக் குருடாக்கு கிறேன் - கொண்டுவாருங்கள் பழுக்கக்காய்ச்சிய இரும்புச் சலாகைகளே -இவளது கைகளே பின்கட் டாய்க் கட்டுங்கள் (சேவகர்கள் அப்படியே செய்ய நெருங்குகின்றனர்.) தொடாதீர்கள் அவளே ! நான் பரிசுத்தமாகப் போற் ஆறும் அவளது உடலைத் தீண்டாதீர்கள் -ஒதுங்குங் கள் ஒருபுறம் (சேவகர்களைப் பிடித்துத் தள்ளு கிருன்) ஆஹா அப்படியா சமாசாரம்!-கைதியாக்குங்கள் இள்வாசனையும் இக்த ராஜ்யத்திற்கு இவன் துரோகி யான்ை - பெருமை வாய்ந்த என் குலத்திற்கே துரோகியானன் (சேவகர்கள் இளவரசனைக் கைதி யாக்குகிரு.ர்கள்.) நான் இதுவரையில் உன் அருமைத் தந்தையாயிருங் தேன்? ஆயினும் முதலில் நான் அரசன், பிறகு தான் உன் கங்கை என்பதை நீ அறியவேண்டும் அந்தப் பெண் மீது நீ கொண்ட ஆசையானது உனது தகப்பனுக்குத் துரோகியாகும்படி உன் னைச் செய்கிறது என் ராஜ்யத்திற்கு நான் செய்ய வேண்டிய கடமையானது, என் சொந்த மகனுக்கே விரோதியாகும்படிச் செய்கிறதென்னே - நான் இன்னும் அரசனுயிருக்கும்போதே என் கடமையை நிறைவேற்றுகிறேன் ! நீ ராஜ்ய துரோகி ஆகிவிட் டாய் ! ஆகையால் இந்தகடினமே, உனக்கு மரண தண்டனை விதிக்கிறேன். - (சபையில் ஆரவாரம்)