பக்கம்:தீயின் சிறு திவலை.pdf/8

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
7

o ராஜா ஆக்கினே! இந்த ராஜ்யத்தில் நமது தகப்பன் மார்களும், பாட்டன்மார்களும் எ ப் பொழு தும் அவருக்குக் கீழ்ப்படிந்த பிரஜைகளாய் இருந்தனர் வாஸ்தவம். ஆயினும் அவர்கள் காலத்தில் அரசர்க ளெல்லாம் சன்மார்க்கத்தில் கடந்து நம்மையெல்லாம் காத்து வந்தனர். இந்த அரசர் ஆளத் தொடகியது முதல்-இப்பாதகன் ! - இந்த காஸ்திகன் ! - மதத் துரோகி !-கொடுங்கோல் மன்னன் -இவன் பட்டத் துக்கு வந்த பிறகு - நமது அறுவடைகளெல்லாம் அக்கினிக்கு இறையாக்கப்பட்டன . நமது வீடுகள் எல்லாம் பாழாக்கப்பட்டன . நமது சகோதரிகளும் பெண்களும் கற்பழிக்கப்பட்டு, கடைத் தெருவில் விற்கப்படுகின்றனர்.-இவற்றை யெல்லாம் சகித்துக் கொண்டு நாம் சும்மா இருக்கிருேம் ! (ஜனங்கள்) (மெல்ல) வெட்கக் கேடு வெட்கக் கேடு! $. பிறகு என்னவென்முல் - அவரது காதுகளுக்கு வெறுப்பா யிருக்கிறதென்று - அவரது கித்திரைக்கு பங்கம் வருகிறதென்று, இக்கோயிலின் மணிகளே அடிக்கக் கூடாதென்று கட்டளையிட்டார் ! - நாம் முறையிட்டோம். நமது முறைகளைக் கேட்டபாடில்லை. இப்பொழு தென்னவென்முல்-நம்முடைய தேவிக்கு நம்முடைய அன்னைக்கு - எல்லாம் வல்ல தெய்வத் திற்கு-காளிகாதேவிக்கு ! நாம் பிரார்த்தனை செய்ய லாகாகென்று கட்டளை யிட்டிருக்கிருர் இவருக்கு பூஜை செய்ய வேண்டுமாம்!-நீங்கள் எவ்லாம் இந்த மடத்தனமான உத்திரவுக்கினங்கி, சும்மா கின்று கேட்டுக்கொண்டிருக்கப் போகிறீர்களா ? உங்களில் ஒருவனவது இல்லையா ? உங்கள் மதத்திற்காக உங்கள் கடமையைச் செய்யத் தக்க ஆண்பிள்ாே? இல்லேயா ?-ஒருவன்கூட இல்லையா 1-ஆல்ை நான் என் கடமையை கிறைவேற்றுகிறேன்! இதோ இக் கொடுங்கோல் அரசன் படத்தை கிழித்தெறிகிறேன்! இவனது முகத்தைப் பாருங்கள்! பாருங்கள் இம் முகத்தை நமது காளிகாதேவியைப் பூசிப்பதை விட்டு இவனைப் பூஜிக்க வேண்டுமென்று இம்முகம் கேட்கிறது . இந்தி முகத்தில் காரித்துப்புகிறேன்!