பக்கம்:தீர்த்தக் கரையினிலே.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அக் கொலைகார வெள்ளையன் கருப்புச் சிறுவனைப் பார்த்துச் சாவதான மாகச் சொன்ன கடைசி வரிகளில் காணப்படும் உணர்ச்சி அழுத்தம் என் குருதியில் சில்லிப்பை உண்டாக்குகின்றது.

O

மனிதாபிமானம்

இன்றும்

மகாகவிகளின் 'உடோபியா' வாகத்தான் உள்ளது. காட்டு மிராண்டித்தனம் 'கம்ப்யூட்டர் வடிவம் பெற்றிருக்கிறது.

அண்டை வீட்டுக்காரன் உடம்பு காய்ச்சலால் சுடும் போது உன்னுடம்பும் சுட வேண்டும். நீ குளிர்ந்த ஏதேன் தோட்டத்தில் வீற்றிருந்தாலும் அரேபியப் பாலையில் வீசும் வெப்பக் காற்று உன்னையும் தகிக்க வேண்டும்.t என்பது போன்ற மெல்லிய மனிதாபிமான உணர்வுகள் இன்றைய கவிதையின் இதய நாதமாகி மக்களினத்தை வழிநடத்திச் செல்லவேண்டும்.

tஇந்த உருதுப் பாடலின் ஆசிரியர் மெளலானா அல்டாஃப் உசேன்

அலி; இவர் கே. ஏ. அப்பாவலின் பாட்டனார்.