பக்கம்:தீர்த்தக் கரையினிலே.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேலம் சென்று விட்டு இரவில்- - கூலியோடு திரும்பும் நாகன் பட்டைச் சாராய நெடியுடன் பழுத்த - நெருப்புத்துண்டக் கண்களுடன் சூடேறிய சலவைப் பெட்டியாய்

வீட்டுக்குத் திரும்புவான்.

தெருக்கோடியில் அவன் வரும்போதே பூஞ்சோலை இலைவிரித்துக் காத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் கல்மாரி போல் வசையும் அடியும் கலந்து கிடைக்கும்.

குடு தணிந்ததும் அவிழ்த்துப் போட்ட கட்டு மரமாய் விடியும் வரை கிடப்பான் நாகன்.

நாகனைப் பொறுத்தவரை மனைவி

ஒரு பஃபே உணவு. நின்று கொண்டே தின்று விட்டுத் தட்டை வீசி எறிந்துவிடுவான்.

பூஞ்சோலைக்குக்

கணவன் ஒரு படையல். அமைதியாகப் பரிமாறி

芷3