பக்கம்:தீர்த்தக் கரையினிலே.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதில் ஏற்பட்ட நீர்ச் சுழிகளைப் போல் அவள் உள்ளத்திலும் வட்டங்கள் வளர்ந்தன. வட்டக் கண்ணாடித் தொட்டியில் விட்ட தங்க மீனாக அவள் உள்ளம் குறிக்கோள் இல்லாமல் SRi 5ð) Sfrtk I SIJ Sðf) SMF kl.l

வந்து கொண்டிருந்தது.

ஏதாவது ஒன்றில் மோதி இடித்துக் கொள்ள விரும்பியது அவள் உள்ளம். இடித்த போதெல்லாம் நழுவி விழுந்தது.

இந்த ஏக்க விளையாட்டில் அவள் ஈடுபட்டிருந்த போது ஒரு மெலிதான இனிய ஓசை.... அவள் உடலில் சிலிர்ப்பு

அவள் உள்ளத்தில் ஒர் உணர்ச்சி ரேகை புதிதாகத் தோன்றி 受 德 மெதுவாகப் படர்ந்துகொண்டிருந்தது.

இந்தச் செவிச்சுகம் எங்குத் தடைப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தால் தன் தலையை மெதுவாக.... மிக மெதுவாகத் திருப்பி நான்கு பக்கமும் பார்த்தாள். யாரையும் காணோம்.

அங்கு நிலவிய

அமைதிப் படலம் மெதுவாகக் கிழிந்து கொண்டிருந்தது.

16