பக்கம்:தீர்த்தக் கரையினிலே.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவளது தனிமை தகர்க்கப் பட்டாலும் அந்த இனிமை ஆவளுககு இதமாகத்தான் இருந்தது.

மார்கழி மாதக் குளிருக்கு அஞ்சினாலும் குளித்து விரும்பிக் குளத்தில் இறங்கும் பெண்ணைப் போல்

அச்சத்தோடு அந்த ஒசையில் குளித்தாள் அவள்.

மூக்கனேரியின் அக்கரையிலிருந்து அந்த இசையலை மிதந்து வந்து கொண்டிருந்தது. நிலவு வெளிச்சத்தை இசையாக மாற்றி யாரோ ஒருவன் புல்லாங்குழலின் துளைகள் வழியாக ஒழுகவிட்டுக் கொண்டிருந்தான்.

சர்க்கரைப் பாகைக் கம்பிபதத்தில் நீட்டுவதைப் போல் இசையணுக்களைக் கோவை செய்து நீட்டிக் கொண்டிருந்தான்.

பூஞ்சோலைககு - இசை நுணுக்கம் தெரியாது.

17