பக்கம்:தீர்த்தக் கரையினிலே.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏரிக் கரையடைந்தாள். எங்கும் இசை வெள்ளம்.

سرته تق تقن

சிந்தனையைக் கூர்மை செய்கிறது. உணர்ச்சி வெறி உயிரைத் துரசாக்குகிறது.

கரையோரத்தில் கவிழ்த்து வைத்திருந்த வாயகனற வெள்ளாவிப்பானை அவள் கண்ணில் பட்டது. அதைக் கவிழ்த்து ஏரிநீரில் மிதக்க விட்டாள்.

மிதக்கும் அந்த

மிருச்ச கடிகையை

இருகையால் அணைத்த வண்ணம் எதிர்க்கரை நோக்கி மிதந்தாள்.

நீரில் ஊறியும் கரையாத தன் சர்க்கரை மேனியோடு அக்கரை ஏறினாள். எதிரில்சதைச் சுவைமேனிக் கனிகள் குலுங்கும் மாந்தோப்பு. தோப்பில் நுழைந்தாள்.

அவ்விசைஒவ்வொரு மாமரத்திலும் எதிரொலித்தது.

மாங்குயிலின் நெருப்புக் குரலோ என்று வியப்போடு பார்த்தாள்.

24