பக்கம்:தீர்த்தக் கரையினிலே.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாங்குவிலின் நெருப்புக் குரலோ என்று வியப்போடு பார்த்தாள்.

கல்லிடுக்கில் புறப்பட்டுத் தரைமின்னல் போல வெள்ளி அருவியொன்று ஓடிவந்து அவளுக்குக் குறுக்கே பாய்ந்தது. அந்த அருவியிசையோ என்று ஐயத்தோடு நோக்கினாள்.

இல்லை! இல்லை! அந்த இசை அவளை மேலும்...

ம்ேலும். இழுத்துச் சென்றது.

பள்ளிக்குச் செல்லும் புதிய வாத்தியாரம்மாளின் பட்டுக் குடைபோலப் பூவாகவே நிற்கும் குட்டைக் கொன்றை மரத்தடியில் ஆமை முதுகு போன்ற பாறை, நிலவு வெளிச்சத்தில் கொன்றை மரம் தன் நிழல் வலையை அப்பாறை மீது விரித்திருந்தது.

பூஞ்சோலை அப்பாறையின் எதிரில் வந்து நின்றாள்.

இசையும் நின்றது. ஏதோ ஓர் உருவம்

25