பக்கம்:தீர்த்தக் கரையினிலே.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாய் திறந்ததும், கோவாலு! மாந்தோப்பின் இரவுக் காவல் காரன் - என்றான் அவன்.

"நான் பூஞ்சோலை! - என்று அவசரமாகச் சொன்னாள் அவள். சில உணர்ச்சிமயமான மெளன. மணித்துளிகள்!

அக்குளில் அவன் ஊன்றிக் கொண்டிருந்த மரக்க்ட்டையை எடுத்துவிட்டு, அவனைத் தன் தோளில் ஏந்திக்கொண்டாள். அவன் அவளைத் தன் இதயத்தில் ஏந்திக்கொண்டான். மாவிலை மெத்தை அவர்களை வரவேற்றது.

அவர்கள் ஒரு புதிய காதல் காவியத்தை முத்தத்தால் எழுதத் தொடங்கினர். காதைகள் நீண்டன.

ஆனால்

காப்பியத்தை முடிக்க அவர்கள் விரும்பவில்லை.

பருவந்தவறித் தப்புக்காய் காய்ப்பதைப் போல் நாகனுக்கு அன்று திடீர் விருப்பம்.

27