பக்கம்:தீர்த்தக் கரையினிலே.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'துரம்’ என்றாள் அவள். "ஆமாம்! நீண்ட தூரம்!” என்று கூறிவிட்டுத் திரும்பிப் படுத்துக் கொண்டான் அவன்.

அடுத்த சில நாட்கள் மோப்பம் பிடிக்கும் வேட்டை நாயாகத் திரிந்து கொண்டிருந்தான் நாகன். பகலை இரவாக்கி இரவைப் பகலாக்கிக் கொண்டிருந்தான் அவன்

வடமீனைப் போல் சிவந்த அவன் போதைவிழியும் வடுப்பட்ட அவன் சிந்தனையும் இரவில் விழித்துக் கொண்டிருந்தன.

வேலைகளை முடித்துவிட்டு உப்புக் காற்றில் பொரிந்த மாமல்லபுரச் சிற்பம்போல் குடிசை வ்ாசலில் உட்காந்திருந்தாள் பூஞ்சோலை. தன் புறவிழிகளால் அகத்தின் ஆழத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

மாணிக்கம் பதித்த மரகத மேனிச் சேர்வராயன் மலையையும்

அதன் கொண்டையூசிப் பாதை வளைவில் ஊர்ந்து செல்லும் வண்டு வாகனத்தையும்

3{}