பக்கம்:தீர்த்தக் கரையினிலே.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நகரும்

நத்தை இரவுகளை நடுக்கத்தோடு கழித்தாள், கோவாலுவின் எக்கக் குழலோசை சூட்டுக் கோலாக அவள் நெஞ்சில் விழுந்தது.

அன்று இரவுதூங்குவது போல் பாசாங்கு செய்தான் நாகன்,

உள்ளக் குதிரை கடிவாளமில்லாமல் தலை தெறிக்க ஓட அவளும் ஓடினாள். பானைத் தெப்பத்தை அவசரமாக மிதக்கவிட்டாள்.

நெத்தினி மீன்குழம்பும் பிட்டும் நிரப்பிய துக்குப் போசியை வாயில் கவ்விக்கொண்டு வேகமாக மிதந்தாள்.

கன்னிமாடக் கரும்பைக் கடித்துச் சுவைப்பதற்கு நடுக்கும் நள்ளிரவில் கிரேக்கக் கடலைக் கடந்துசென்ற லியாண்டரின் துடிப்பு இன்று அவளிடம் காணப்பட்டது.

என்ன இது! பாதி வழியிலேயே அவள் பானைத் தெப்பம் கரையைத் தொடங்கிவிட்டது!

32