பக்கம்:தீர்த்தக் கரையினிலே.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவம்! அவளுக்குத் தெரியுமா? அவளைப் பழிவாங்க அன்று நாகன் மாற்றிவைத்த பச்சைக் களிமண் பானை அதுவென்று?

குண்டு. பாய்ந்த கொழுத்த வரால் மீன் தண்ணிர்ப் பரப்பில் தலை கீழாகப் புரள்வதுபோல் புரண்டாள் பூஞ்சோலை, தண்ணிரைக் குடித்தாள்! தத்தளித்தாள்! ஆழத்தில் அவள் அழுந்திக் கொண்டிருந்தாள்.

அப்போதுஇரண்டு இரும்புக் கரங்கள் அவளை இறுகத் தழுவின. ஒற்றைக் காலில் நீந்திவந்து ஒய்ந்து போன கோவாலுவின் கரங்கள் அவை.

அடுத்தநாள்பின்னிய கொடிகளாக இரண்டு பினங்கள் மூக்கனேரிக் கரையில் ஒதுங்கிக் கிடந்தன. உடைந்த புல்லாங் குழலொன்று அருகில் கிடந்தது. அப் பிணங்களைப் பார்த்துச்

சிலர்... . கண்ணிர் விட்டனர். சிலர்... காரி உமிழ்ந்தனர்

33