பக்கம்:தீர்த்தக் கரையினிலே.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனச்சாட்சியால் உந்தப்பட்டு இந்த மன்றத்தில் ஏறி நிற்கிறேன்.

பெண்களின்-- காலிலே,விழுந்துகிடக்கும் என்னைப்போன்ற ஒருத்தி, ஆடவன் ஒருவன் கையிலே விழுந்தால் என்ன ஆவாள் என்பதற்கு நானே சான்று,

மின்னலைப் பிடித்து மடியில் கட்டி மறைக்க முடியுமா?

விலைமதிப்பற்ற என்னை மூடி மறைக்க முடியாத கம்மியன் வேந்தன் கவனத்தை வேறுபக்கம் திருப்ப இந்த நாடகம் ஆடிவிட்டான்.

பாண்டியனும் கோவலனும் பள்ளிகொள்ளும் அவசரத்தில் என்னுடைய படுக்கை மாறிவிட்டது. உண்மையை நான் உணர்ந்திருந்தும் அகலிகை போல் பேசாமல் இருந்துவிட்டேன்.

நான்பாஞ்சாலியாக இருந்திருந்தால் படுக்கை மாற்றம் பற்றிக் கவலைப்பட்டிருக்க மாட்டேன். உள்ளம் உறுத்தியதால் உண்மையைக் கூற நானே வந்துவிட்டேன்.

36