பக்கம்:தீர்த்தக் கரையினிலே.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உன் குரல் இசைப் படுத்தப்பட்ட கிண் கிணி ஓசை.

குயில்கள் குரலொடுங்கும் கார்காலத்தில் உன் குரல்வளையில் குடியேறி இசைப்பயிற்சி பெறுகின்றன.

உன் கூந்தல் அலைக் கனவுகள். தொங்கும் வரிப்பாடல்கள்! நீ ஆடை இலக்கணத்தை அகற்றிய புதுக்கவிதை. உன் மேனிபன்னீரின் திடவுருவம். பளிங்கின் இளகல்!

உன் பேச்சு

சர்க்கரையின்

பூரித கரைசல். உன் பெருமூச்சுப் பட்டால் வேதியல் ஆய்வுக் கூடத்தின் எரிவாயு உடனே தீப்பற்றிக் கொள்ளும்.

உன் பாதகமலங்கள் கல்லூரி வாயிலை

42.