பக்கம்:தீர்த்தக் கரையினிலே.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

○

அங்கு செல் குதிரையே!

குதிப்பதால் பெயர்பெற்ற குதிரையே!வீரரின் மதிப்பு வாகனமே! மாவே! தாவும் சந்த விருத்தமே! சிந்துப் பாடலே! உந்தும் வேகத்தின் உருவக அணியே!

நடைப்பெரு மிதமே! நடுக்கும் பெரும்போர்ப் படைப்பெரு வானில் பாய்கின்ற மின்னலே! கனைக்கும் கம்பீரமே! கட்டுக் கடங்காமல்

எனக்குச் சவாலாய் எதிர்நிற்கும் ஆற்றலே!

கானல் நீர்போல் சிலிர்க்குமுன் உடம்பில் சேணம் பூட்டிச் சீறும் சாட்டையைச் சுழற்றி அடித்துன் துடுக்கை அடக்கிக் காடும் மேடும் கல்லும் முள்ளும் நாடும் நகரமும் நடுங்களன் முன்னோன் உன்னை நடத்தினர்;

ஆனால் நானோஉன்றன் முதுகு நெளிய ஊர்ந்து குன்றைத் தாவிக் குவலயம் கடந்து வானவில் வீதியில் வட்ட மிட்டு, அந்திவான் சோலையில் அரும்பி, விடியலில் சிந்தும் பூக்களைச் சேகரம் செய்து, வெள்ளி நிலவுக் கூடையில் இங்கே அள்ளிக் கொணருவேன்! அங்குசெல் குதிரையே!

75