பக்கம்:தீர்த்தக் கரையினிலே.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

○

வானவில் துண்டே! வண்ணத்துப் பூச்சியே!

வண்ணத்துப் பூச்சியே! வண்ணத்துப் பூச்சியே! கண்பசி தீர்க்கும் கலைச்சுவை விருந்தே! உடைந்த வானவில் துண்டுகள் விண்ணைக் கடந்து வந்து காட்சிதரும் அழகே! மிதக்கும் இன்பமே! மின்னும் நவமணிப் பதக்கமே! பறக்கும் பவலூத் துண்டே! கோல மலர்மீது குவிந்து விரியும் நாளிதழ்ப் பூவே! நாட்டிய மாடித் தென்றல் காற்றில் திரிகின்ற பட்டமே!

தந்தைதாய் மடியில் மாறி மாறிக் குந்திக் குதித்து விளையாடும் குழந்தைபோல் முல்லையில்;தவழ்ந்துசெவ் வல்லியில் புரள்கிறாய்! கொம்புத் தேன் மலர்க் குளத்தை, நீண்டவுன் தும்பிக் கையால் துழாவு கின்றாய்! கொடியின் விரல்நுனிக் கொம்பில் அமர்ந்து போதி மரத்துப் புத்தனைப் போல ஏதோ நினைப்பில் இருக்கிறாய்! உடனே பனியில் குளித்த பருவ மேனிக் குமரி மலரிடம் கொஞ்சி விளையாடி இமைக்காத நீல மரகத விழிகளால் சுமைக்காதல் பேசிச் சுவைத்து மகிழ்கிறாய்! மரகதச் சோலையின் மாப்பிள்ளை யாகிய உன்றன் வாழ்க்கை யர்ந்தவோர் காப்பியம்.

ஆனால்பெருமை பேசும் இந்தியர் வாழ்க்கை உருவம் சிதைந்த உடைந்த கண்ணாடி.

76