பக்கம்:துங்கபத்திரை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

"ஹ......! பிரபு, இது விஜயநகர சாம்ராஜ்யத்திற்கே அவமானம்! மனிதனுக்கு மூச்சு முக்கியம்; அந்த மூச்சுக்கு மூக்கு மிக அவசியம்......! விஜயநகர சாம்ராஜ்யத்தின் முச்சை அடைத்துவிடுவோம் என்ற இறுமாப்பில் நமது எதிரிகள் இவ்வாறு செய்திருக்கிறார்கள்" என்று அபிநயத்துடன் கூறினார் ராஜா அய்யர், மற்றவர்களுக்கு விகடமாகத் தெரிந்தாலும், பண்டிதர் ராஜா அய்யர் கூற்றில் உண்மை இருப்பதாகவே ராயர் கருதினார். நாகமநாயக்கரும் அதனை மறுப்பதற்கில்லை.

"பண்டிதரே, நீர் கூறுவது முற்றிலும் உண்மை. எதிரிகள் என்றால் யார்? பீஜப்பூர் சுல்தானே நமது பகைவர்? மரியாதை தெரியாதவர்கள்! பகைவர்களில் கூட கௌரவமான பகைவர்களைத்தாள் விஜய்நகரப் பேரரசு மதிக்கும் என்பதை அவர்கள் அறியார்கள் போலும்! நாகமரே! பண்டிதர் கூறுவதில் எவ்வளவு தான் உண்மையிருந்தாலும் நாம் முறைப்படி கோயில் நிர்வாகிகளை விசாரித்தே ஆக வேண்டுமல்லவா! ஆலயச் சிப்பந்திகளை தீர விசாரித்து அறிய வேண்டியதை அறிந்து அரசாங்கத்திற்கு தெரிவிக்கும் பொறுப்பை அரியநாதரிடம் ஒப்படையுங்கள்! அதுவும் நாளையே ஒப்படையுங்கள்! அடுத்த கிழமைக்குள் விசாரணையின் முடிவு நமது பேரவைக்கு வந்தாக வேண்டும்!" என்று கூறிவிட்டு ராயர் அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.

***

நாடக அரங்கைச் சூழ்ந்து மேகம் போல் மக்கள் திரண்டிருந்தார்கள். மன்னர் மக்கள் மத்தியில் அமர்ந்து அவருக்கும் மக்களுக்குமுள்ள தொடர்பையும், நன்னம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.

நாடகம் தொடங்கி முதலங்கம் முடியும் கட்டம் வந்தது. ராயரும் அவர் தம் பரிவாரமும் உற்சாகத்தில் மூழ்கி இருந்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துங்கபத்திரை.pdf/16&oldid=1507254" இலிருந்து மீள்விக்கப்பட்டது