பக்கம்:துங்கபத்திரை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

செய்யப்பட்ட மகமதிய வீரன் ராயரின் எதிரே நிறுத்தப் பட்டிருந்தான். ராயரின் மெய்க்காப்பாளர்களான விசுவாத நாயக்கனும், அரியநாதனும் மன்னருக்கு வலத்திலும், இடத்திலும் இடம் பெற்றிருந்தனர். பண்டிதமணி ராஜா அய்யர் தவிர மற்ற அவைப் புலவர்கள் அனைவரும் அவைக்கு வந்திருந்தார்கள் அரசவையில் எல்லோருக்கும் அந்தக் குற்றவானியைக் கடுமையாகத் தண்டித்து விடவேண்டும் என்றுதான் விருப்பம். ராயருக்கும் அந்த ஆசைதான் மேலோங்கி நின்றது. ஆனால் ராஜா அய்யரின் மேலான ஆலோசனைக்காக அவர் காத்திருந்தார். அப்போது கோட்டைக் காவலர்கள் அவைக்குள் வந்து கடந்த இரவு கண்டெடுத்த துணி மூட்டையை மன்னர் முன் படைத்தார்கள். சபை அதிர்ச்சி அடைந்தது; அதிலிருந்த பொருள்களைப் பார்த்து.

"இந்தக் கொடியவன்தான் நமது பண்டிதமணியையும் மாய்த்திருக்க வேண்டும். இவனைச் சித்திரவதை செய்வதே உகந்த தண்டனைK"என்று சபையில் பெருங் கூச்சல் கிளம்பியது.

குற்றவாளி சிரித்தான். அந்தச் சிரிப்புக்குத்தான் எத்தனை அர்த்தங்கள்!

அதுவரை வாய்திறக்காதிருந்த ராயர் பேசத் தொடங்கினார்:

"இந்தச் சபை என் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறதோ அந்த அளவுக்கு என் வேண்டுதலை மதித்துக் கௌரவிக்கும் என்று நம்புகிறேன். இந்தக் குற்றவாளி நமது பண்டிதமணியின் பிணத்தை நம்மிடம் ஒப்படைத்து விட்டால் இவன் செய்த இரண்டு குற்றங்களையும் மன்னித்து, துங்கபத்திரையின் வடகரையில் அவிழ்த்து விடலாம்" - ராயரின் இந்த முடிவை சபை அரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துங்கபத்திரை.pdf/24&oldid=1507351" இலிருந்து மீள்விக்கப்பட்டது