பக்கம்:துங்கபத்திரை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

29

வரை கிருஷ்ண தேவராயரை தீர்த்துக் கட்ட முடியாதது கவலைக் குரியதே! இன்னும் ஒரு கிழமைக்குள் ராயரின் மரணச் செய்தி நமது சுல்தானை இன்பத்திலாழ்த்த வேண்டும்; அல்லது நீவிர் பீஜப்பூர் வந்து சேர வேண்டும். தாமதம் கூடாது.
இங்ஙனம்,
ஒற்றர் படைத் தலைவன், பீஜபூர்.

குழப்பத்தைக் கிளறிவிட்ட இந்த ஓலையால் குற்றவாளியைக் கண்டு பிடிக்க முடியுமா என்பதை சபையுள் கேள்விக் குறியாக எழுந்தது.

"பெரியவரே, விஜயநகரப் பேரரசுக்குச் சூழ்ந்து வரும் பேராபத்தைக் கவனப்படுத்தியதற்கு அரசாங்கம் உங்களுக்குக் கடமைப்பட்டிருக்கிறது. ஆனால், தங்கள் விழிகளையும் பிடுங்கிவிட்டு என்னையும் கொல்ல எத்தனித்த அந்தக் கொலைகாரனைக் கண்டு பிடிக்க உங்களால் அடையாளங்கள் ஏதாவது தெரிவிக்க முடியுமா?" என்று ராயர் துக்கத்துடன் கேட்டார்.

"அடையாளம் எதற்கு அண்ணலே, அந்தப் பொல்லாதவன் பெயரே எனக்குத் தெரியுமே! அவன் நமது அரண்மனைப் பெருச்சாளி அதிபரே!"

"பெயர் சொன்னால் சபைக்குத் தெரியுமா?" மன்னர் கேட்டார்.

"அவன் பெயரையா சபைக்குத் தெரியாதென்கிறீர்கள்! மன்னிக்க வேண்டும் தேசப் பிதாவே! இந்தப் புனித மன்றம் என்னுடைய வாக்கு மூலத்தில் நம்பிக்கை வைக்க வேண்டும். கேடு நினைக்காதவன், எவருக்கும் ஊறு விளை விக்காதவன், ஏடும் எழுத்தாணியும் தவிர ஏதொன்றும் அறியாதவன் தெரிவிக்கிறேன்; அந்தக் குற்றவாளி

து-2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துங்கபத்திரை.pdf/29&oldid=1507358" இலிருந்து மீள்விக்கப்பட்டது