பக்கம்:துங்கபத்திரை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

31

பெருமையுடன் கண்களை மூடுகிறேன்" என்று கூறிவிட்டு அந்தக் கவிஞன் தரையில் தலையைச் சாய்த்தான். மறுபடி அவன் எழுந்திருக்கவில்லை.

மன்னரால் இந்தத் துயரத்தைத் தாங்க முடியவில்லை. நன்றியுள்ள பிரஜையின் சாவும், நண்பனைப் போல் நடித்தவனின் துரோகமும் விஜயநகரப் பேரவையை அன்று வாட்டி எடுத்து விட்டன. அவைப் புலவர்கள் ஆளுக்கொரு தீர்மானத்தைக் கொண்டு வந்தனர். மன்னர் எதற்கும் தலைசாய்க்கவில்லை. ஆகாய வீதியில் பறந்து கொண்டிருந்த அவருடைய உருக்குலைந்த சிந்தனை, சபையிலிருந்த விசுவநாதனையே வட்டமிட்டுக் கொண்டிருந்தது. "பண்டிதமணி தான் மாறு வேடத்தில் வந்து மன்னரைக் கொல்ல முயன்றிருக்கிறார்" என்று விசுவநாதன் தெரிவித்ததை நினைந்து நினைந்து அவர் வியப்பிலாழ்ந்திருந்தார். சபையும் அதை நினைத்துப் பார்க்காமலில்லை. எதிலும் அடக்கமாகப் பேசும் அவைப் பெரும் புலவர் அல்லாசானி பெத்தன்னா பேச எழுந்தார். சபை அவருடைய கருத்தைக் கேட்க நிமிர்ந்து உட்கார்ந்தது.

"வீர பரம்பரையில் தோன்றிய நமது இளைஞர் விசுவநாத நாயக்கர் விஜயநகரப் பேரவையின் பாராட்டுதலுக்குரியவர். புலவர் குழுவின் சார்பில் சர்வ வல்லமை பெற்ற நமது சக்கரவர்த்தியின் கவனத்திற்கு ஒரு வேண்டு கோளைச் சமர்ப்பிக்கிறேன். மன்னவரின் உயிர் காத்த விசுவநாத நாயக்கருக்கு அரசாங்கம் வெகுமதி அளிப்பதோடு, பதவி உயர்வும் கொடுத்து கௌரவிக்க வேண்டும். அத்துடன் இன்னொரு துணைக் கோரிக்கை. இந்தக் குற்றவாளி ராஜா அய்யரை நமது கோட்டையின் எதிரிலுள்ள சதுக்கத்திலிருக்கும் இரும்பு கூண்டில் அடைத்துப் போடவேண்டும். அய்யர் சாகும்வரை அதற்குள்ளேயே கிடந்து உழல வேண்டும். அப்போதுதான் குறுகிய பரப்புள்ள கூண்டிலடைபட்டுக் கிடப்பதைக் காட்டிலும் நாக்கை அறுத்துக் கொண்டு செத்து விடலாம் என்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துங்கபத்திரை.pdf/31&oldid=1507527" இலிருந்து மீள்விக்கப்பட்டது