பக்கம்:துங்கபத்திரை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

37

மேடைக்கு அனுப்பியிருக்கிறார்கள். இந்த விஜயநகர சாம்ராஜ்யத்தில் எத்தனை எத்தனை வீரவாலிபர்கள் நாட்டுக்கும் நகரத்திற்கும் பயன்படாமல் நாரிமணிகளின் நளினப் பொன் மேனியில் மதிமயங்கி மடிந்திருக்கிறார்கள் என்பதை நான் அறிவேன். இலக்கியத்தில் வரும் தாய் நாட்டின் சிறப்பைப் புகழும் புலவர் அதே இலக்கியத்தில் வரும் காதலையும் மனமுருகப் படித்தின்புறுகிறார். ஆனால், அந்தக் காதலால் நல்லிளங்காளைகள் நாட்டை மறந்து விடுகிறார்களே என்று புலவர் புழுங்கிச் சாகிறார். காதல் வேண்டுமா? நாடு வேண்டுமா? என்று குழம்பித் தவித்துக் கையிலிருக்கும் எழுத்தாணியால் நெஞ்சில் குத்திக் கொண்டு துடிக்கிறார். இந்த வேதனையை நான் எத்தனையோ முறை அனுபவித்திருக்கிறேன்!"

"ஐயா"

"இடையூறு செய்வதாக எண்ணாதே! நண்பரின் மகனுக்கு எதிர்காலத்தைக் காட்டுகிறேன். சக்கரவர்த்தி ராயர்மேல் நமக்கு உள்ள அன்பு குறைந்து விடக்கூடாது; "நீதி விளக்கேற்றி வைக்கும் மேதை; நாதியற்ற மக்களுக்கு வாழ்வளித்த வள்ளல் என்ற புகழுரைகளுக்கு அவர் பாத்திரமல்லர் என்ற எண்ணம் நமதுள்ளங்களில் தளிர்விட வாய்ப்பளித்து விடக்கூடாது. மன்னர் ராயருக்கும் மகா மண்டலேஸ்வரர் நாகமநாயக்கருக்கும் உன்னால் பகை மூளுமானால், அதைவைத்து எதிரிகள் ஒரு பெருங்காவியமே தீட்டி விடுவார்கள். நாடு துண்டுபடும், நாட்டவர் துன்புறுவர். அன்னியர் புகுவர்; அதன்பயனாய் புண்ணிய விஜய நகரம் நேர்த்தியும் கீர்த்தியும் பெற்ற நேர்மையாளர் பலர் சதியின் பெயரால், –குற்றச்சாட்டின் பெயரால் மன்னரின் மனத்தாங்கலுக்கு இலக்காகி தண்டிக்கப் பட்டிருக்கிறார்கள்." — என்று விட்ட இடத்திலிருந்து தொடங்கினார் துர்ஜதி.

விசுவநாதனால் இதற்குமேல் தாங்கமுடியவில்லை. கண்ணீர் பொல பொல வென்று கொட்டியது. புதிதாகக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துங்கபத்திரை.pdf/37&oldid=1507587" இலிருந்து மீள்விக்கப்பட்டது