பக்கம்:துங்கபத்திரை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

கூண்டிலடைக்கப்பட்ட கிளியே, சுவைக் கனிகளை வெறுத்து சுதந்திர வாழ்வை எண்ணிக் கண்ணீர் வடிக்கும் போது, ஆர்ப்பரிக்கும் போர்ப்புரவிகளை முறியடிக்கும் ஓர் இளைஞன் கண்ணீர் வடிப்பது தவறல்ல என்று தான் அவன் நினைத்தான். ஒருவன் தன் காதலை மறப்பது புதுப்பிறவி எடுப்பதற்குச் சமம். புதுமணப்பெண் பெற்றோரை மறந்து புருஷன் வீட்டிற்குப் போகும்போது அடையும் மனநிலைக்கும் காதலைத் துறக்கும் வாலிபன் உள்ளத்திற்கும் வேறு பாடில்லை. மணப்பெண் துடிப்பது பாசத்திற்காக; வாலிபன் அலறுவது நேசத்திற்காக!

துர்ஜதி ஆசனத்தை விட்டு எழுந்தார். "என்பணி முடிந்து விட்டது விசுவநாதா! இனி உன் பணிதான்! அந்தப்பணி உன் தந்தை பெயரையும் உன் பெயரையும் விஜயநகர் வரலாறு களங்கப்படுத்தாததாக அமைய வேண்டும். உலகத்தில் எந்த மனிதனும் ஓர் அழகான பெண்ணின் கணவன் என்பதற்காக மரியாதை பெற்றதில்லை. பொழுது விடிந்தால் பொழுது சாய்ந்தால் தினசரி போர் முகங்களைக் கண்டு கொண்டிருக்கும் உன் போன்ற படை வீரனுக்கு உன் குணமறிந்த உத்தமிதான் பத்தினியாக வரவேண்டும். யோசித்து முடிவுக்கு வா. நீ இன்று அநீதிக்குப் பிறகு என்னைச் சந்திக்க முயற்சி செய். நன்வழி கூறுவதே என் தொண்டு! என்வழி முள்வழி என்றால், நானே அவர்களை நெருஞ்சிக் காட்டில் தூக்கி எறிந்து விடுவேன் இது என் குணம்" என் இறுதியாகக் கூறி விட்டு துர்ஜதி விடைபெற்றுக்கொண்டார்.

விசுவநாதன் முகத்தைத் துடைத்துக் கொண்டு அன்னை மங்கம்மா இருந்த அறையைத் திறந்தான். உள்ளே அவள் மயங்கிக் கிடந்தாள். துர்ஜதியின் பேச்சு அவளைத் துவள வைத்து விட்டது. விசுவநாதனின் எதிர்காலத்தைக் கேடு சூழ்ந்து விடுமோ என்று அவள் அஞ்சிக்கிடந்தாள். அவள் முகத்தில் வியர்வை பூத்திருந்தது. விசுவநாதன் நடுக்கத்துடன் அவளைத் தேற்றினான். பதிலுக்கு அவள் எதுவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துங்கபத்திரை.pdf/38&oldid=1507588" இலிருந்து மீள்விக்கப்பட்டது