பக்கம்:துங்கபத்திரை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

39

பேசவில்லை. வியர்வைத் துளிகளோடு விழிநீர் சங்கமமாகி இருந்தது.

***

அரண்மனைக்கு வடக்கே உள்ள தாமரைப் பொய்கையின் கரையில் சித்திரம்போல் ஒரு சாந்துக் கட்டிடம் இருந்தது. பார்ப்பவர்களுக்குப் பரம்பரை பரம்பரையாக அந்த வீட்டில் ராஜ குடும்பத்தினரே வாழ்ந்து வருவது போல் தோன்றும். அவ்வளவு அழகாகவும், எடுப்பாகவும் அந்தவீடு விளங்கியது. முகப்பு வாசலையும், முன் வீட்டையும் இணைக்கும் பூங்காவனத்தில் மல்லிகைப் பந்தல் பட்டுப் போல் விரிந்து படர்ந்து கிடந்தது. சில நேரங்களில் அந்த மல்லிகையின் நறுமணத்தில் கட்டுண்டு, இளவரசி துங்கபத்திரையை பூவேண்டி அனுப்புவதுண்டு. அந்த வீட்டில் முல்லை மொட்டுப்போல் எல்லையில்லா அழகி ஒருத்தி உலவினாள். அவள் கன்னிப்பெண். தன்னிகரில்லா அழகி என்ற கர்வம் வேறு அவளிடம் வளைந்து கிடந்தது. சின்னவயதிலே சுட்டிப்பெண் என்ற பெயரெடுத்தவள். பருவ வயதில் கேட்கவேண்டுமா? மானாய் ஓடி, மயிலாய் ஆடி அந்த மாளிகையையே அதிரடித்து வந்தாள்.

கொஞ்ச நாட்களாக அவன் மனத்தில் ஒரு புதிய எண்ணம் குடி புகுந்திருந்தது. வீட்டுப் புறா போல் இருந்த அவள் உள்ளம் கோயில் புறாபோல் அலையத் தொடங்கி விட்டது. அமுதம்போல் சமைத்துப் போட்டவள் அலுத்துச் சலித்துச் போனவளைப் போல், உப்பில்லாமல், சுவையில்லாமல் சமைக்கத் தொடங்கினாள். பூஞ்சிட்டுக்களைப்போல் அவள் விழிகள் கணநேரத்திற்குள் பல இடங்களைத் தொட்டுத் தடவித் திரும்பின. எப்போதிருந்து இந்தக் குணம். இந்தக்கோலம்! அவருடைய அகமும் புறமும் சூழப் பரவிக் கிடக்கும் புதிய குறும்புகளை இதழ் விரித்து எத்தனை நாளாயிற்று? தாயில்லாப் பிள்ளையாக அவளை வளர்த்து வரும் அவளுடைய தந்தை துர்ஜதிக்குத் தான் தெரியும்! விசுவநாதன் காதலுக்கு வெடிவைத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துங்கபத்திரை.pdf/39&oldid=1507589" இலிருந்து மீள்விக்கப்பட்டது