பக்கம்:துங்கபத்திரை.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

அப்பா நீங்கள் மனம் வைத்தால் வைத்தால் முடியும்."–கங்கா கண்ணீர் பொங்கப் பேசினாள். குரல் வலிக்கக் கத்தினாள்.

"கவலைப்படாதே கங்கா! நல்வழி கூறுவது. என் தொண்டு என்வழி முள் வழி என்றால் அவனை நானே விடுவேன்' என்று நெருஞ்சிக் காட்டில் தூக்கி எறிந்து அவளிடம் தெரிவித்து விட்டுத்தான் வந்திருக்கிறேன். இதனால் நாகமருக்கும் எனக்கும் தீராப் பகை மூண்டாலும் சரி, ராயர் மதிப்பை நான் இழந்தாலும் சரி, கங்கா உன் கழுத்தில் விசுவநாதனை மாலை சூட வைக்கிறேன். இது சபதம் கங்கா, இது சபதம்!" - கர்ஜித்தார் துர்ஜதி.

'சபதம் தோற்றால்!" - தூபமிட்டான் கங்கா.

"சபதம் தோற்பதா? நடக்காது கங்கா, உன் உயிரைக் குடிக்கக் கூடிய சபதத்திலா நான் தோற்பேன்?" அடித்துப் பேசினார் துர்ஜதி. கங்கா சிரித்தாள்.

"அப்பா நான் சாகமாட்டேன். சபதத்தில் நீங்கள் தோற்றாலும் நான் சாகமாட்டேன். என் கண்களைப் பாருங்கள்; உங்களுடைய கண்கள், நெற்றியைப் பாருங்கள். உங்களுடைய பரந்த நெற்றி. உங்கள் தந்திரம் எனக்கும் உண்டு. உங்கள் சூழ்ச்சி என்னிடமும் இருக்கிறது." களத்தில் குதித்த வீரனைப்போல் பேசினாள் கங்கா.

"கங்கா என்ன பிதற்றுகிறாய்? உனக்குப் பைத்தியம் பிடித்து விட்டதா?"

அப்பா! விசுவநாதர் நமது இல்லம்தேடி வரவில்லையானால் உங்களுடைய அறிவுரையை அவர் மதிக்கவில்லை என்று பொருள்." கங்கா – துர்ஜதியின் கெடுமதிக்குச் சூடேற்றினாள்.

துர்ஜதி, கங்காவின் சொற் சிலம்பத்தில் படிந்து விட்டார். துர்ஜதியின் பலவீனத்தைப் புரிந்து கொண்ட அவர் மகள், தந்தையின் கண்களை கனல் என்றாள். அவரது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துங்கபத்திரை.pdf/42&oldid=1507877" இலிருந்து மீள்விக்கப்பட்டது