பக்கம்:துங்கபத்திரை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

45

"இனி ஒவ்வொருவரும் விழிப்போடு இருக்கவேண்டும். ராஜா அய்யர் ஒரு மகமதியராக இருப்பார் என்று மதிப்பிடவாவது முடிந்ததா?" என்று மெய் வருத்தம் காட்டத் தொடங்கினான் தளபதி சிங்கராயன்.

"ஓஹோ..... நீங்கள் ராஜா அய்யரைக் குறிப்பிடுகிறீர்களா? அதுதான் நடந்துபோன கதையாகிவிட்டதே"– துர்ஜதி அலட்சியமாகப் பதில் சொன்னார்.

"வேறென்ன சொல்கிறீர்கள் எதுவும் புதுக்கதை நடந்துவிட்டதா? யார் அவன்?" என்று வியப்போடு கேட்டான் சிங்கராயன்.

"புதுக்கதைதான். அதுவும் காதல்கதை அல்லவா நடந்து விட்டது. இல்லாவிட்டால் நான் ஏன் துடித்துக் கொண்டு வரப்போகிறேன். அரசர் கேட்டால் கேட்டால் ஊன், உறக்கம் கொள்ளமாட்டார். குடியிருந்த வீட்டில் கொள்ளி வைக்கலாமா? அவன் அப்படிச் செய்வான் என்று நான் எதிர்பார்க்கவில்லை." – துர்ஜதியாரின் அடிப்படை தலை சிறந்த இசைவாணரின் ஆலாபனைபோல் இருந்தது.

"புலவரே, மன்னருக்கு இழுக்கு என்றால் உமக்கும் எனக்கும் ஏற்பட்டது போல் இல்லையா? பகையை வளர விடக்கூடாது. பதிகத்திலேயே பிடுங்கி எறிந்துவிட வேண்டும். விவரமாகச் சொல்லுங்கள்" என்றான் சிங்கராயன்.

"மானங்கெட்ட காரியத்தை விவரமாக எப்படி விளக்குவது தளபதியாரே! இளவரசி துங்கபத்திரைக்கும் விசுவநாதனுக்கும், கள்ள உறவு. கண்ணுாரக்கண்ட அந்தப்புரச் சிப்பந்திகள் வாயாரப் புலம்பிவிட்டுப் போகிறார்கள். என்னால் துயரத்தைத் தாங்கமுடியவில்லை. இரவெல்லாம் இமை கூட்டவில்லை"–துர்ஜதி பேசும்போது அவரது உதடுகள் துடித்தன.

து–3
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துங்கபத்திரை.pdf/45&oldid=1507882" இலிருந்து மீள்விக்கப்பட்டது