பக்கம்:துங்கபத்திரை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

பெறுகின்றன. இந்த நேரத்தில் நாம் மதுரை வெற்றிக்கு இன்னொரு விழா—சிறிய விழா நடத்துவது உசிதமல்ல. நாகமரும் அதை விரும்பமாட்டார். அவர் அடக்கம் நிறைந்த மாவீரர். புகழை விரும்பாத பெருந்தன்மையாளர்" என்று துர்ஜதி தீர்மானத்தோடு பேசினார். அவரது குரல் ஆலயமணி ஓசைபோல் ஒலித்தது. இருபதாண்டு காலமாக பெத்தன்னாவின் தலைமையில் துர்ஜதி அரசரின் ஆய்வுக் குழுவில் இடம் பெற்றிருந்தார். ஒரு தடவைகூட பெத்தன்னாவின் தீர்மானத்தை துர்ஜதி எதிர்த்ததில்லை. வெட்டிப் பேசியதில்லை. அரசர் முதல் அத்தனை அதிகாரிகளும் பெத்தன்னாவுக்கு அவ்வளவு மரியாதை கொடுத்து வந்தார்கள். ஆனால் இந்த முறை துர்ஜதி எதிர்த்துப் பேசி விட்டார். ஆம்; பெத்தன்னாவின் தீர்மானம் சபையில் எடுபடவில்லை. நாகம நாயக்கருக்கு தனி வரவேற்பில்லை என்று முடிவாயிற்று. நாகமருக்குச் செல்வாக்கு அதிகரித்தால் விசுவநாதனின் பதவி உயர்ந்துகொண்டே போகும் என்றுதான் துர்ஜதி அவ்வாறு எதிர்த்துப் பேசினாரோ?

சக்கரவர்த்தி ராயர் துர்ஜதியின் தீர்மானத்தை ஏற்றுக் கொண்டாலும், தனது சிறப்பதிகாரத்தைப் பிரயோகிக்காமல் இல்லை. நாகம் நாயக்கரின் மதுரை வெற்றிக்கு அவரை மதுரைக்கு மந்திரி யாக்கிவிட்டார் சக்கரவர்த்தி ராயர். சபையில் கையொலி எழுந்தது. பெருந்தன்மை மிக்க பெத்தன்னா துர்ஜதியைத் தட்டிக் கொடுத்து தோல்வியை மறக்கடித்துக் கொண்டார்.

***

பிறந்த பொன்னாட்டின் இரண்டாவது நூற்றாண்டு விழா தன்னுடைய காலத்தில் வருவதை எண்ணிப் பெருமைப்பட்டார் கிருஷ்ணதேவ ராயர். துயரம் வருகிற போதும் நினைத்தது நடக்கமுடியாமல் போகும்போதும் மக்களின் அன்பை எண்ணி மகிழும் பெரும் குணம் தொடக்கத்திலிருந்தே ராயரிடம் குடிகொண்டிருந்தது. இதனால்தான் அவர் எதையும் உற்சாகத்தோடு செய்ய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துங்கபத்திரை.pdf/58&oldid=1509906" இலிருந்து மீள்விக்கப்பட்டது