71
தளபதி சிங்கராயன் கம்பீரமாக மாளிகைக்குள் நுழைந்தான்.
"வருக தளபதியாரே வருக!" என்று முகப்புகழ்ச்சியுடன் வரவேற்றார் துர்ஜதி.
"நல்ல ஏற்பாடு செய்தீர்கள். மன்னர் பிரானின் குடும்ப கௌரவத்தைக் காப்பாற்றிய பெருமை உங்களையே சாரும். காதலாம் காதல்! இருக்க இடம்கொடுத்தால் படுக்க இடம் பிடித்துக் கொள்வது மனித இயல்பாகி விட்டது" - சிங்கராயன் வயிற்றெரிச்சலைத் தொடுத்துக் கொண்டே போனான்.
"இந்தப் பெருமை அரியநாதனைத்தான் சாரும். உத்தமன். நன்றியுள்ளவன். மல்யுத்தப்போட்டிக்குப் பரிசைத் தீர்மானித்தது அரியநாதன் அல்லவா" என்றார் துர்ஜதி.
"நான் இவ்வளவு காலமும் அரியநாதனும், விசுவநாதனும் உயிருக்குயிரானவர்கள் என்று நினைத்தேன். அவர்கள் இருவருக்குமிடையே இவ்வளவு இடைவெளி இருக்குமென்று நினைக்கவில்லை,"- சிங்கராயன் பூரண திருப்தியோடு தெரிவித்தான்.
"ஒருவன் புகழ் பெறுவதை இன்னொருவன்
விரும்புவதில்லை. அதுவும் அரசாங்கத்திற்குத் துரோகம் நினைக்கும் விசுவநாதனை யார்தான் ஆதரிக்கப் போகிறார்கள். மன்னர் குடியை அல்லவோ கெடுக்கப் பார்த்தான் விசுவநாதன். இனி ஒருபோதும் அவனுக்குத் துங்கபத்திரை கிடைக்க மாட்டாள்" என்று கூறி வெற்றிச் சிரிப்புச் சிரித்தான், துர்ஜதி.
சிங்கராயன் அத்துடன் விட்டுவிடவில்லை. மேலும் தொடர்ந்தான்.
"விசுவநாதனே போரில் வெற்றி பெறுவதாகவே வைத்துக் கொள்வோம். அவன் எந்தப் பெண்ணைத் தேர்ந்தெ