உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:துங்கபத்திரை.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

"ஆம், கங்கா உங்களுக்காகச் சுவைமிக்க விருந்து தயாரித்திருக்கிறாள். உங்கள்பால் அவளுக்கு அளவு கடந்த அக்கறை," - குழைந்து பேசினார் துர்ஜதி.
"உண்மைதான், இதை நான் அறிவேன். என்ன இருந்தாலும், உங்களுக்கும் எனக்கும் இன்று நேற்று உறவா?"
"பேஷ்...... வரவர அந்த உறவு நெருங்கி அல்லவா வருகிறது!"
"வரவேண்டுமென்பதுதானே என் பிரார்த்தனை!"
"வேள்வி வெற்றி பெற வித்தியாரண்யர் அருள் புரிவாராக" என்று வினயத்தோடு ஆசி கூறினார் துர்ஜதி.
தளபதி சிங்கராயன் விடைபெற்றான். விடை பெறும் பொழுது, அவனது விழிகள் கங்கா உலவிய கொல்லைப் பக்கத்தை முற்றுகையிட்டன. கங்கா அப்போது அவளுடைய வெள்ளைப் பூனைக்கு குங்குமத்தால் நாமம் போட்டுக் கொண்டிருந்தாள்.


இரவு, பகல் எந்த நேரமும் மல்யுத்தப் போட்டியைப் பற்றியே சிந்தனை விசுவநாதனுக்கு. வெற்றி பெற்றவன் சாம்ராஜ்யத்தின் கவனத்தை கவர்வான். மன்னரின் அன்புக்கு பாத்திரமாவான் என்பதை நினைத்து நினைத்து அவன் பூரிப்பெய்தினான்.

இரவு நேரம் - விசுவநாதன் அவனது வண்ணக்கூடாரத்தினுள்ளிருந்து யுத்தப் பயிற்சி செய்து கொண்டிருந்தான். மெல்லிய பட்டு விரித்தாற்போல் துங்கபத்திரை நதியில் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது.
காவல் கோபுரத்தின் மேல் மாடத்திலிருந்து காவல் காரன் சுழல் விளக்கு வைத்துக் கொண்டு தொலை நோக்கிய வண்ணமிருந்தான். கூடாரக் காவலர்கள் ரோந்து சுற்றிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துங்கபத்திரை.pdf/74&oldid=1860107" இலிருந்து மீள்விக்கப்பட்டது