உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:துங்கபத்திரை.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

75

கொண்டிருந்தார்கள். இத்தனைக் கட்டுக் காவலர்களையும் மீறிக் கொண்டு ஒரு வாலிபன் அந்த முகாமுக்குள் நுழைந்து வெளியில் வந்தான். விசுவநாதனுடைய கூடாரம் எது என்று தெரியாமல்தான் அவன் அவ்வாறு அலைந்திருக்க வேண்டும். அவனுடைய இடுப்பிலே வாள் தொங்கியது. கால் உறைக்குள் கத்தி இருந்தது.
வாலிபன், விசுவநாதன் கூடாரத்தருகே வந்து விட்டான். அவன் எதிர்பார்த்திருக்க மாட்டான். காவல் கோபுரத்திலிருந்த காவல்காரனின் சுழல் விளக்கு திடீரென்று கூடாரங்களுக்கு மத்தியில் சுழலத் தொடங்கி திருட்டு வாலிபன்மீது விழுந்தது. அந்த மின்னல் வெளிச் சத்தில் காவல்காரன் கண்களில் வாலிபன் சிக்கிவிட்டான். அடுத்தகணம் கோபுரத்திலிருந்து கொம்பு முழங்கியது. மேலேயிருந்து குரல் கொடுத்தான்.
"விசுவநாதா கூடாரத்தருகே வேற்றாள் உலவுகிறது." என்று காவல் கோபுரத்திலிருந்தவன் அறிவித்தான். அவ்வளவுதான் தரையில் கிடக்கும் தவளை மீது வானத்தில் பறக்கும் பருந்துகள் பாய்வது போல அத்தனை பேரும் விசுவநாதன் கூடாரத்தைச் சூழ்ந்து விட்டார்கள்.
அந்த வாலிபன் 'குபீர்' என்று விசுவநாதன் கூடாரத்திற்குள்ளேயே நுழைந்து விட்டான். அதுதான் விசுவநாதன் கூடாரமென்று அவனுக்குத் தெரியாது. உள்ளே எண்ணெய் தோய்ந்த உடம்புடன் மல்யுத்தப் பயிற்சியிலிருந்த விசுவநாதன் புலிப்பிடியாகப் பிடித்து அந்த வாலிபனை ஒரு சுழற்றுச் சுழற்றினான். அவன் சுருண்டு புரண்டு மூலையில் போய் விழுந்தான். அந்தக் கலவரத்தில் வாலிபன் கையிடுக்கிலிருந்த ஓலை கீழே விழுந்து விட்டது. விசுவநாதன் ஓலையை எடுத்துப் பிரித்தான்.
"இனிய விசுவத்திற்கு,
நமது தலைநகரத்தில் இரண்டாவது நூற்றாண்டு நிறைவு விழாவிற்கான சிறப்பான ஏற்பாடுகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துங்கபத்திரை.pdf/75&oldid=1860118" இலிருந்து மீள்விக்கப்பட்டது