76
நடைபெற்று வருகின்றன. மல்யுத்தப் போட்டியில் கலந்து கொள்வதற்காகப் பல நகரங்களிலிருந்தும் வீரர்கள் வந்திருக்கிறார்கள். தாங்கள் இந்தப் போட்டியில் கலந்து கொண்டால் என்னை இழந்தவராவீர்கள். தங்களை வெல்ல யாருமில்லை. நீங்கள் வென்றால் அரசாங்கத்தின் நிபந்தனைப்படி ஒரு குமரிப்பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள நேரிடும். அதை என்னால் சகித்துக் கொள்ள முடி யாது அத்தான். நம்முடைய காதல் ஈடேற வேண்டுமென்று தங்களுக்கு விருப்பமிருந்தால் நீங்கள் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளக் கூடாது.
தங்கள் உயிர்க் காதலி,
துங்கபத்திரை.
விசுவநாதனின் உள்ளத்தை இந்தக் கடிதம் கிள்ளி எடுத்தது. விசுவநாதன் நிமிர்ந்து பார்த்தான். அங்கே அந்த வாலிபனைக் காணவில்லை. இவ்வளவு பாதுகாப்பையும் விழுங்கிவிட்டு, அந்த வாலிபன் தப்பித்து விட்டான். விசுவநாதன் கோபத்துடன் கூடாரத்திற்கு வெளியே வந்து கைவிளக்கைத் தலையில் வைத்துக் கொண்டு சுற்றினான். அந்த வாலிபன் ஆற்றோரமாக ஓடிக்கொண்டிருந்தான். வெகு தூரத்தில் குதிரை ஒன்று நின்றுகொண்டிருந்தது. விசுவநாதன் உடனே அவனுடைய வெண்புரவியில் ஏறினான். முன்னும் பின்னுமாகக் குதிரைகள் பறந்தன.
வாலிபனின் குதிரை வெகு தூரம் எட்டிவிட்டது. விசுவநாதன் முகாமுக்குத் திரும்பிவிட்டான். வழியெல்லாம் அவன் மனம் தத்தளித்தது. கரை தெரியாமல் திணறினான். கடிதத்தில் கண்ட வாசகங்கள் அவனை உறுத்திக்கொண்டிருந்தன.
'போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றால் நிபந்தனைப்படி ஒரு குமரிப்பெண்ணை மணந்துகொள்ள