உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:துங்கபத்திரை.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

77

வேண்டும்' என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தது நியாயமாகப்பட்டதால் அது விசுவநாதனைப் பெருமூச்சு விடத் தூண்டியது. அதே நேரத்தில் ஆருயிர் நண்பன் அரியநாதன் செய்துவிட்டுப்போன போதனை விசுவநாதன் தலையில் பெரும் பாரமாகச் சேர்ந்து கிடந்தது. 'மன்னர் உன் வெற்றியை எதிர்பார்க்கிறார்; உனக்குப் பொன்னாபிஷேகம் செய்து போற்றிப் புகழத் துடிக்கிறார். தவற விட்டு விடாதே!" என்று அவன் உணர்த்திய உற்சாகப் பேச்சு ஒரு பக்கம் போதையேற்றி வைத்திருந்தது.
குதிரை முகாமுக்குள் வந்துவிட்டது. விசுவநாதன் உள்ளம் நிலைபெறவில்லை.


விஜயநகரப் பேரரசின் இரண்டாவது நூற்றாண்டு நிறைவு விழா! நகரம் புதுப் பொலிவு பெறத் தொடங்கியது. இல்லங்களும் உள்ளங்களும் குதூகலித்திருந்தன. அரண்மனை மாடத்தில், ஆலயத்துக் கோபுரத்தில், போர்க் களத்தில் ஆர்த்தெழுந்து பலியான அடலேறுகளின் கல்லறைகளில் விளக்கொளி நிறைந்தது. விஜயநகரப் பேரரசின் இரண்டாவது நூற்றாண்டு நிறைவு விழாவை அவ்வளவு சிறப்பாகக் கொண்டாடிக் களிப்பெய்தினார்கள். அரசாங்கம் செல்வத்தை மழைபோல் அள்ளிச் சொரிந்தது. சக்கரவர்த்தி ராயர் தனிப்பெரும் ஆனந்தத்தில் திளைத்திருந்தார். அந்த ஆனந்தம், ராஜ்ய மக்கள் அவர் மீது வைத்திருந்த அளவு கடந்த அன்பைத் தெளிவாக்கியது. மன்னர்தான் என்றாலும், மக்களுக்கு அவர் மகேசுவரனாகவே விளங்கினார். திருவிழாக் காலத்தில் அவருடைய ஒவ்வொரு எண்ணங்களும், திட்டங்களும் மக்களின் புன்னகையை ஒட்டியே சுழன்றன. அதைப்போலவே ஒவ்வொரு வீடும் இன்பப் பெருவெள்ளத்தில் மிதந்தது. அதுவும் கன்னிப் பெண்கள் உள்ள வீடுகள் மணவீடுகளாகவே அலங்கரிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு வீட்டுப் பெரியவர்களும், மல்யுத்தப்

து-6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துங்கபத்திரை.pdf/77&oldid=1860122" இலிருந்து மீள்விக்கப்பட்டது