78
போட்டியில் வெற்றிபெரும் வீரன் தங்கள் தங்கள் பெண்களைத் தேர்ந்தெடுத்துவிட்டால் என்ன செய்வது என்ற நினைப்பில் வீடுகளைப் புதுப்பித்து வைத்திருந்தனர்.
எத்தனையோ களியாட்டங்கள் நடைபெற்றன. நாடகம், நாட்டியம், செப்படிவித்தை, களைக்கூத்து, சிலம்பு விளையாட்டு - இப்படிப் பலவிதம். ஆனால் மக்கள் அனைவரும் குடும்பம் குடும்பாக மல்யுத்த அரங்கிற்குத்தான் திரண்டு கொண்டிருந்தார்கள். விஜயநகர அரசு அந்தப்போட்டியை வெறும் வீர விளையாட்டாக மட்டும் ஏற்பாடு செய்யவில்லை. அதில் குடும்பங்களின் இணைப்பையும் ஏற்படுத்தியிருந்தது. சிறைப்பட்டுக் கிடந்த சித்திரப் பைங்கிளிகளின் எதிர் காலமும் ஜோடிக்கப்பட்டிருந்தது.
சக்கரவர்த்தி ராயர் வண்ணமேடையில் வெள்ளிக் குறிச்சியில் வீற்றிருந்தார். அஷ்டகஜங்கள் அரண்மனை மரியாதைக்குரியவர்களின் ஆசனங்களில் அமர்ந்திருந்தார்கள். கண்ணைக் கவரும் வனப்புடன் கன்னிப் பெண்கள் ஒருபுறம் - மின்னலைப் போன்ற மேனியுடன் கூடிய மல்யுத்த வாலிபர்கள் மற்றொருபுறம். அரியநாதன் மன்னருக்கருகில் நின்று கொண்டிருந்தான். முதலில் சிங்கராயனை தளபதிக்குரிய ஆசனத்தில் காணவில்லை. ஆம்; அவன் தாமதமாக வந்தான். கன்னிப் பெண்களின் நுழைவாயிலில் நின்று அவன் குறிப்பெடுத்துக் கொண்டிருந்துவிட்டு அப்போது தான் களத்திற்குள் நுழைந்தான்.
திடீரென்று மண்டபத்தில் கடல் அலைபோல் கையொலி எழுந்தது. அழகிய ரோஜா நிறப்பட்டு உடுத்தி விசுவநாதன் பார்வையாளர் பகுதியில் வந்து கொண்டிருந்தான். மன்னர் முகத்தில் இன்பக் குறி முளைத்தது. குமரிகளின் பூங்காவில் குமிண்சிரிப்பும், இதழ்விரிப்பும் தென்பட்டன. துர்ஜதியின் தவப் புதல்வி கங்கா கண்ணிலாடும் பாவையாய், கருத்தில் மிதக்கும் அச்சுப் பதுமையாய் அரங்கத்தை விழுங்கிக் கொண்டிருந்தாள். கோடானகோடிக் கண்கள் அவளைத் தொட்டுக் கொண்டிருந்தன. ஆனால் அவள் கண்கள் மட்டும்