பக்கம்:துணிந்தவன்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 பட்டங்கள் மீது இந்நாட்டினருக்கு இருப்பது போன்ற மோகம் வேறு எந்நாட்டினருக்கும் இராது என்றே தோன்றுகிறது. சாதாரண ஜனங்கள் தங்களினின்றும் மாறுபட்ட வர்களுக்குப் பட்டங்கள் வழங்குகிறார்கள். தம்மினும் உயர்ந்தவர்களைக் கெளரவிக்கப் பட்டங்கள் அளிக்கிறார் கள். உயர்ந்துவிட்டவர்கள். தங்களைத் தாங்களே விளம்பரப் படுத்திக் கொள்ளவும் தங்கிளுக்கு வேண்டியவர்களை உயர்படுத்தவும் பட்டங்கள் கொடுக்கிறார்கள். தங்களுக்குத் தாங்களே பெருமை தேடிக் கொள்ளப் பாடுபடுகிறவர்கள் தங்கள் புகழ்பாடிகள் சிலரைக் கொண்டு பட்டம் சூட்டும் விழாவுக்கு ஏற்பாடு செய்து கொள்கிறார்கள். இத்தகைய யுக தர்மங்கள் எவ்வளவோ! அநேகமாக அவற்றில் அனைத்தையும் ஈடுபடுத்தி வெற்றிகரமாக முன்னுக்கு வந்தவர் சிந்தனைச் சூரியன் பரப்பிரம்மம் பி. ஏ. கலாச்சாரக் கழகம்’ என்ற அமைப் பின் தனிப்பெரும் தலைவர் அவர். கட்சிகள் மலிந்த இந்த நாட்டில் தானும் ஒரு கட்சி அமைத்து, தான் வாழ்வதோடு தன்னை நம்பி வரும் சிலரையும் வாழவைக்க ஆசைப் பட்டார் அவர். தனது கட்சியையும் கட்சி என்று சொன் னால், பத்தோடு பதினொண்ணு; அத்தோடு இதுவு மொண்ணு' என்று மற்றவர்கள் ஒதுக்கி விடுவார்கள் என்ற அச்சம் அவருக்கு எழுந்தது. ஆகவே அவர் தமது கலாசாரக் கழகம் ஒரு கட்சி அல்ல; ஒற்றைத்தனி அமைப்பு' என்று சந்தர்ப்பங்களிலும் அசந்தர்ப்பங்களிலும் நாப்பறை அறைந்து வந்தார். 'அமைப்பு’ என்றால் என்ன என்று கேட்டால் ஸ்தாபனம் என்றும், ஸ்தாபனம் பற்றி விளக்கம் கோருகிறவர்களிடம் அமைப்பு’ என்று எடுத்துச் சொல்லியும் மிரட்டி வந்தார் அவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துணிந்தவன்.pdf/101&oldid=923459" இலிருந்து மீள்விக்கப்பட்டது