பக்கம்:துணிந்தவன்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துணிந்தவன் § 2 நான்கு வருடங்கள் வாழ்ந்திருப்பது நமது பாக்கியமே யாகும் நாற்பத்து நாலு இரட்டை நாலு ஆகா என்றெல்லாம் புதிய தத்துவங்களும் வியாக்கியானங்களும் ஒலிபரப்பப்பட்டன. இந்த பிஸினஸில் அவருக்கு பல ஆயிரங்கள் அகப்பட்டன. நாடு வளர்ந்ததோ இல்லையோ, நாட்டினரின் வாழ்க்கைத்தரம் உயர்ந்ததோ என்னவோ, சிந்தனைச் சூரியன் பரப்பிரம்மம் பி.ஏ.யின் தொந்தி வளர்ந்தது உண்மை. மேனி மினுமினுப்பு அதிகரித்தது. பொருளாதார நிலைமை உயர்ந்தது. இடைக்காலத்தில் கலாசாரக் கழகம் கொஞ்சம் டிம் அடித்துப் போச்சு என்று பரப்பிரம்மம் எண்ணினார். அதை மீண்டும் பிரகாசம் உடையதாக்க என்ன செய்யலாம் என்று யோசித்தார். அப்பொழுது மாதவன் என்கிற நட்சத்திரத்தின் ஒளி அவர் கவனத்தைக் கவர்ந்தது. அவனைப் பயன் படுத்த வேணும் என ஆசைப்பட்டார். திட்டம் தீட்டினார், செயலிலும் இறங்கினார். அதன் விளைவுதான் பட்டம் அளிப்பு விழா. மாதவனுக்கு நடிக சாம்ராட் என்ற பட்டம் அளிக்க முன்வந்தது 'கலாசாரக் கழகம் . த டபுடலாக விளம்பரங்கள் செய்து, ஊர்வலம் நடத்தி, மாதவன் மேடைக்கு அழைத்து வரப்பட்டான். குமாரி சம்பாவும் உடன வெந்தாள். ஏகபபடட கூடடம. பரப்பிரம்மம் பி.ஏ. கலாசாரக் கழகத்தின் நோக்கங் கள் பற்றி விரிவாகப் பேசினார். மாதவனின் ஆற்றல் பற்றி அற்புதமாக அளந்தார். சம்பா அம்மையாரின் அழகை யும் திறமையையும் பற்றி ஒரு வசனகாவியமே இயற்றி விட்டார்; -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துணிந்தவன்.pdf/104&oldid=923462" இலிருந்து மீள்விக்கப்பட்டது