பக்கம்:துணிந்தவன்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 97 தற்கொலைதான் என்று அவன் உள்ளம் அலறியது. காந்தி, கடைசியில் உன்கதி இப்படியா ஆகவேண்டும்?' என்று புலம்பியது. நான் தான் அவள் சாவுக்குக் காரணமோ?" என்று எண்ணாமலிருக்க முடியவில்லை அவனால். முதல் தடவை நான் அவளை விட்டுப்பிரியும் போது, அவளுக்கு நல்லதுதான் எண்ணினேன். அப் பொழுது அவள் அழுது, மனவேதனை அனுபவித் தாள்.... பிறகு தற்செயலாகச் சந்திக்க தேர்ந்த போது என்னை மறந்துவிடும்படி சொன்னேன். அதுவும் அவள் நன்மையைக் கருதிச் சொன்னதுதான். ஆனால் அதன் விளைவு பயங்கரமாகி விட்டதே..... மாதவன் பித்துப் பிடித்தவன் போல் உட்கார்த் திருந்தான். அவன் உள்ளத்தின் துயரச் சுமை கனத்தது. இதயமே வெடித்து விடும்போல் உறுத்தியது. கண்களில் நீர் பொங்கியது. மனசைக் கல்லாக்கிக் கொண்ட மாதவன் இறந்தகால நினைவை எண்ணிக் கண்ணிர் பெருக்கினான். சிறு பிள்ளை போல விம்மி விம்மி அழுதான். அதற்காக அவன் வெட்கப்படவில்லை. அப் பொழுதும் நானுறவில்லை. பின்னரும் வெட்கம் அடைய வில்லை. -உலகத்தை வெற்றி கொள்ளும் ஆசையால் முன்னே முன்னே சென்று கொண்டிருந்த நெப்போலியன் ரஸ்யாவின் விரிந்த பரப்பிலே அடிவைத்தபோது, சோர்ந்து தளர்ந்து திரும்ப நேர்ந்தபோது, பனியிலும் சூறையிலும் அடிபட்டு அவன் குதிரை செத்து விழுந்தது. அதைக் கண்டதும் துயரக் கண்ணிர் வடித்தான் அவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துணிந்தவன்.pdf/109&oldid=923467" இலிருந்து மீள்விக்கப்பட்டது