பக்கம்:துணிந்தவன்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூலாசிரியரைப் பற்றி திருநெல்வேலி மாவட்டம் ராஜவல்லிபுரத்தில் பிறந்த ரா. சு. கிருஷ்ணசுவாமி 12-11-1920ல் பிறந்தவர். பள்ளி இறுதி வகுப்புப் படிப்பை முடித்துவிட்டு, நான்கு ஆண்டுகள் அரசுப் பணியில் உழைத்த பிறகு, எழுத்தாளனாக வளர வேண்டும் என்ற நோக்கத்தோடு அதை உதறிவிட்டு வல்லிக் கண்ணன் ஆகி உற்சாகமாக எழுத ஆரம்பித்தார். 1939 முதல் இவரது சிறுகதைகளும் கட்டுரைகளும் வெளிவரலாயின. திருமகள்', 'சினிமா உலகம் நவசக்தி (இலக்கிய மாத இதழ்) ஆகியவற்றில் உதவி ஆசிரியராகப் பணியாற்றிவிட்டு, 1943 முதல் 1947 மே முடிய கிராம ஊழியன்' எனும் மறுமலர்ச்சி இலக்கிய மாதம் இருமுறைப் பத்திரிகையின் ஆசிரியராக வளர்ச்சி பெற்றார். 1950-51ல் சென்னையில் ஹனுமான் வார இதழில் துணை ஆசிரியராகப் பணிபுரிந்தார். பின்னர் எந்த நிறுவனத்திலும் சேராது சுதந்திர எழுத்தாளராக வாழ முற்பட்டார். தனது 62 வருட இலக்கிய வாழ்வில் சிறுகதை, நாவல், குறுநாவல், கட்டுரை, கவிதை, வாழ்க்கை வரலாறு, நாடகம், கடிதங்கள், மொழிபெயர்ப்பு எனப் பலதுறைகளிலும் அறுபதுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதியுள்ளார். ‘புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் என்ற நூலுக்காக இந்திய சாகித்திய அகாதமிப் பரிசு 1978ல் இவருக்கு வழங்கப்பட்டது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சிப் பரிசு எழுத்தாளர்கள் பத்திரிகைகள் - அன்றும் இன்றும் எனும் நூலுக்கு 1987ல் அளிக்கப்பட்டது: அக்னி-அrர விருது', ஆழ்வார்கள் ஆய்வு மையம் விருது, தமிழ் சான்றோர் பேரவை விருது மற்றும் பல இலக்கிய அமைப்புகளின் தமிழ்ப்பணி விருதுகள் இவருக்கு வழங்கப் பெற்றுள்ளன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துணிந்தவன்.pdf/11&oldid=923468" இலிருந்து மீள்விக்கப்பட்டது