பக்கம்:துணிந்தவன்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 துணிந்தவன் மாவீரன் அலெக்ஸாந்தர் தன் திட்டத்தின்படி மேலும் படையெடுத்து இந்தியாவில் முன்னேற வேண்டும் என்று ஆசைப்பட்டபோது, அவனது வீரர்கள் மறுத்தனர். வந்த வழியே திரும்பத் துடித்தனர். சிதைவுறும் தன் கனவை எண்ணி வேதனைக் கண்ணிர் உகுத்தான் அவன். எவ்வளவு பெரிய லட்சியவாதியாக இருப்பினும், எத்தகைய செயல் திறம் பெற்றவனாயினும், மனம் குமைந்து கண்ணிர் சிந்த வேண்டிய கட்டம் ஒன்று ஒவ் வொருவர் வாழ்விலும் வந்தே தீரும். இதை நன்கு உணர்ந்திருந்த மாதவன் தான் அழுத தற்காக வெட்கம் கொள்ளவில்லை. தனது நல்ல பண்பு களுக்கு ஒர் நினைவுச் சின்னமாக உருவகப்படுத்தியிருந்த காந்திமதி தன்னுடைய கடைசி நற்காரியத்தின் அடை யாளமாக வாழவேண்டியவள் என அவனால் போற்றப் பட்ட பெண் இப்படிச் சீர்கெட்டுச் சிதைவுற்றதை எண்ண வும் அவன் அழத்தான் வேண்டியிருந்தது. மனப்புழுக்கம் அகலும் வரை தனிமையில் அழுது தீர்த்தான். 19 'ஸார், என்னைத் தெரிகிறதா?” 'சம்பா ஆர்ட் புரடக்ஷன்ஸ் ஆபீஸ் அறையில், இந்தக் கேள்வியுடன் தன் முன்னால் வந்து நின்ற யுவதியை மேலும் கீழும் நோக்கினான் மாதவன். உதடுகளை மடித் துக் கொண்டு தலையை ஆட்டினான் இல்லை என்ற தன்மையில். 'முன்பு மந்திரம் தெரியும் மாயம் தெரியும் என்று டுப் அடித்தீர்களே! என் பெயரை யூகித்து சரியாகச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துணிந்தவன்.pdf/110&oldid=923469" இலிருந்து மீள்விக்கப்பட்டது